Sunday 31 May 2009

நாயின் பழக்கம்


விட்டிலோ , அல்லது வெளியிலோ எங்கே பார்த்தாலும் ஒரு நாய் படுத்திருக்கும் கோணம் , வீசும் காற்றிற்கு எதிராகத்தான் இருக்கும் . நாயின் இயல்பிலேயே படிந்திருக்கும் பழக்கம் அது . காரணம் , நாய்க்கு மோப்ப சக்தி அதிகம் உண்டு . காற்று சுமந்து வரும் வாசனையிலிருந்தே அதனால் தன் எதிரிகளை அடையாளம் கண்டு பிடித்து விட முடியும் .

Saturday 30 May 2009

சிந்தனை துளிகள்

* படித்த வாசகத்தில் பிடித்த வாசகம் உனக்கு சொந்தமானது .
* சேற்றில் கல் வீசினால் உன் முகம்தான் சேறாகும் .
* கோபம் வரும்போதெல்லாம் அதன் விளைவுகளை எண்ணிப்பார் .
* உன்னை நேசி உலகை வெல்வாய் . 
* முயற்சியே எமது மூச்சு .

Tuesday 26 May 2009

மகாத்மா காந்தி


அஹிம்சா தனித்துவத்தின் தந்தையான மகாத்மா காந்தி எளிமையான தோற்றம் , ஆடம்பரமற்ற வாழ்க்கை , முழு மனித குலத்தையும் மேன்மைப்படுத்த வேண்டும் என்ற சீரிய குணம் என்பவற்றுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் . அதன் காரணமாக மகாத்மாவாக வரலாற்றில் இடம் பெற்றவர் . இவரது இயற்பெயர் மோகனதாஸ் காந்தி . வட இந்தியாவின் போர்பந்தர் என்ற கிராமத்தில்1869ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2ம் திகதி பிறந்தார் . இவரது போராட்டம் 'அஹிம்சா வாதம்' என்ற வன்முறையற்ற சமாதான வழியிலான போராட்டமாகவே இருந்தது . அதனால் அனைத்துலகினதும் கவனத்தை கவர்ந்தது . சத்தியாக் கிரகமும் ,உண்ணா விரதமுமே இவரது போராட்ட ஆயுதங்களாக இருந்தன . இவர் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுங்கி வைக்கப்பட்டிருந்த சமூகத்தின் உயர்வுக்காகவும் உழைத்தார் . இவர் இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடினர் .இவரது அஹிம்சா போராட்டம் , சத்தியாக் கிரகம் ,உண்ணா விரதம் ஆகிய போராட்டங்களின் முன்னிலையில் பிரித்தானிய ஆங்கிலேய பேரரசு வெட்கித் தலை குனிந்தது.1947ம் ஆண்டு தம் தோல்வியை ஒப்புக்கொண்டு இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கியது . இந்த நிலையிலும் இந்து -முஸ்லிம் இன ஒற்றுமையை காந்தி வலியுறுத்துவதை இந்து மத வகுப்பு வாதிகள் விரும்பவில்லை .இதன் காரணமாக இத்தகைய இந்து மத வகுப்பு வாத அமைப்பின் உறுப்பினன் ஒருவரால் 1948ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் திகதி மகாத்மா காந்தி சுட்டு கொல்லப்பட்டார்
நன்றி - ஆயிரம் ஆண்டுகால மனிதர்கள்

Sunday 24 May 2009

விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ரோங்


மனித வரலாற்றில் 1969ம் ஆண்டு ஜுலை மாதம் 20ம் திகதி ஒரு முக்கியமான திருப்பு முனை ஏற்பட்டது . அன்றுதான் மனிதர்களுள் ஒருவன் வானத்தில் ஏறி சென்று நிலவில் காலடி எடுத்து வைத்தான் .அவன் பெயர் தான் நீல் ஆம்ஸ்ட்ரோங் . நீல் ஆம்ஸ்ட்ரோங் சந்திரனில் காலடி எடுத்து வைத்ததும் பின்வரும் செய்தியை உலகிற்கு அறிவித்தார் . லட்ச கணக்கான மக்கள் தொலை காட்சி மூலம் அந்த காட்சியை அவதானித்து கொண்டிருந்தார்கள் . அவர் கூறினார் ......... "நான் சந்திரனில் எடுத்து வைக்கும் இந்த முதல் காலடி மனித குலத்தின் மிகப் பெரிய பாய்ச்சலுக்கு சமமானதாகும் ''.

இவருடன் எட்வின் அலட்ரின் , மைகல் கொலின்ஸ் ஆகிய இரண்டு விண்வெளி வீரர்களும் சென்றிருந்தனர் . இவர்கள் ஏறி சென்ற விண்வெளி வாகனத்தின் பெயர் ''அப்பலோ 11'' என்பதாகும் . ''விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ரோங் ஒரு முறை இலங்கைக்கு வந்திருந்தார் . தான் சந்திரனிலிருந்து கொண்டு வந்த பாறையின் ஒரு துண்டை இலங்கைக்கு பரிசளித்தார்''

பொருட்களை கண்டுபித்தவர்களை அறிந்து கொள்வோம்


மின் குமிழ் - தோமஸ் அல்வா எடிசன்
தீ குச்சி - ஜோன் வாக்கர்
கண்ணாடி - ஆக்ஸ்பர்க்
விமானம் - ரைட் சகோதரர்கள்
மின் அழுத்தி - எச்.டப்லியு .சீலி
ஹெலிகொப்டர் - இட்டின் நிக்சன்
இசை தட்டு - பீட்டர் கோல்ட் மார்க்
கணினி - சார்லஸ் பபேஜ்
தொலை பேசி - அலெக்சாண்டர் கிரஹம் பெல்