Sunday 19 July 2009

புத்திசாலி ரம்மி !



ஆலந்தூரில் ரம்மி என்றொரு சிறுவன் இருந்தான். அவன் மிகவும் புத்திசாலி; தைரியசாலியும் கூட. ஒரு நாள் அவன் பள்ளி விடுமுறைக்கு பக்கத்து ஊரில் இருக்கும் தன் பாட்டி வீட்டிற்கு செல்ல ஆசைப்பட்டான். அவன் தந்தை அவனை தனியாக பாட்டியின் ஊருக்கு அனுப்பி வைக்க ஆசைப்பட்டார். ஆனால், ரம்மியின் அம்மாவிற்கு அது சிறிதும் பிடிக்கவில்லை. ""என் பிள்ளையைத் தனியே அனுப்பமாட்டேன்,'' என்று கூறி அடம் செய்தாள்.


""என் மகன் தைரியக்காரன். அவன் எந்த எதிர்ப்பையும் சமாளித்துவிடும் திறமை படைத்தவன். வீணாக பயப்படாதே,'' என்று தைரியம் கூறினார் தந்தைமகனுக்கு கட்டுச் சோறு கட்டிக் கொடுத்து பக்கத்தூருக்கு அனுப்பி வைத்தனர். ரம்மியும் வெகு பத்திரமாக தன் பாட்டி வீட்டுக்கு போய் சேர்ந்தான். பாட்டி பேரனை இரண்டு மூன்று நாட்கள் தன் வீட்டில் வைத்திருந்தாள். பிறகு அவனை அவரது பெற்றோரிடம் திருப்பி அனுப்பி வைத்தாள். திரும்பிச் செல்லும் தன் பேரனுக்கு காதில் ஒரு தங்க கடுக்கனைப் போட்டுவிட்டாள். பேரனும் பாட்டியிடம் சொல்லிக் கொண்டு தன் பெற்றோரிடம் புறப்பட்டான். பாதி தூரம் நடந்து வந்ததும் அவனுக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. தூரத்தில் ஒரு சிறிய கிணறு தெரிந்தது. உடனே அந்தக் கிணற்றிலிருந்து எப்படி நீர் இறைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.


அந்த நேரத்தில் அந்த வழியாக ஒரு முரடன் வந்தான். அவன் ஒரு திருடன். அவன் தனியாக வந்த ரம்மியைப் பார்த்தான். அவன் காதில் தங்கக் கடுக்கன் இருப்பதையும் பார்த்தான். உடனே அதை அபகரிக்க முடிவு செய்தான். தன் காதில் இருக்கும் கடுக்கனையே திருடன் விடாமல் பார்ப்பதை ரம்மி கவனித்தான். தன்னை அடித்துப் போட்டுவிட்டோ அல்லது கொன்று விட்டோ தனது காதுக் கடுக்கனை திருடன் திருடிக் கொண்டு போய்விடுவான் என்று ரம்மிக்கு நன்கு புரிந்தது. மறு நிமிடம் ஏதோ யோசித்தான். மிகுந்த பயத்துடன் அழுவது போல அழத் தொடங்கினான். சிறுவன் கிணற்றருகில் நின்றதையும், கிணற்றை எட்டிப் பார்த்ததையும், பின்பு திடீரென அழுவதையும் பார்த்த திருடன் ஒரு நிமிடம் விழித்தான். ""தம்பி ஏன் இப்போது நீ அழுகிறாய்?'' என்று கேட்டான்.


""அண்ணே! என் பாட்டி எனக்கு இந்த ஒரு சவரன் தங்க கடுக்கனையும், ஐந்து சவரன் சங்கிலியையும் போட்டு விட்டார். நான் தண்ணீர் தாகம் எடுத்ததால் இந்த கிணற்றடிக்கு வந்தேன். கிணற்றில் நீர் இருக்கிறதா என எட்டிப் பார்த்தேன். அப்போது என் சங்கிலி கழன்று கிணற்றுக்குள் விழுந்துவிட்டது. அதனை எடுக்காமல் வீட்டிற்கு திரும்பினால் என் அப்பா என்னைக் கொன்றே விடுவார்,'' என்று கூறி அழுதான். இதைக் கேட்ட திருடனின் மனம் ஏதோ திட்டம் இட்டது. ஒரு சவரன் கடுக்கனை விட ஐந்து சவரன் சங்கிலி மிகவும் விலையுயர்ந்ததல்லவா? எனவே, அதனை கிணற்றுக்குள் இறங்கி தேடி எடுக்க திருடன் முடிவு செய்தான். ""தம்பி! நீ அழாதே! இதோ கிணற்றுக்குள் இறங்கி உன் சங்கிலியை எடுத்து வருகிறேன்,'' என்று கூறினான்.


மறுநிமிடம் கிணற்றுக்குள் இறங்கினான். இதைக்கண்டதும், சிறுவன் அந்த இடத்தை விட்டு சிட்டாக பறந்தோடி விட்டான். திருடன் கிணற்றுக்குள் சங்கிலியை தேடோ தேடென தேடிக் கொண்டிருந்தான். அதற்குள் ரம்மி தன் ஊருக்குள் ஓடி வந்துவிட்டான். தன் வீட்டிற்குச் சென்று பெற்றோரிடம் நடந்ததைக் கூறினான். பெற்றோர் அவனது சாமர்த்தியத்தைப் பெரிதும் புகழ்ந்தனர். ஆபத்து நேரத்தில் பயந்து நடுங்கி அழாமல் சாமர்த்தியமாகவும், தைரியமாகவும், செயல்பட்ட ரம்மியை ஊரே புகழ்ந்தது.
குட்டீஸ்... எதிர்பாராமல் நமக்கு ஆபத்து வருவது இயற்கை. ஆனால், அந்த ஆபத்து நேரத்தில் அஞ்சாமல் அதை எதிர்க்கொண்டு சமாளித்து ஜெயிக்க வேண்டும். அது தான் நல்ல திறமை. அதை விட்டு விட்டு பயந்து நடுங்கி அழக்கூடாது. புரிகிறதா?

நன்றி தினமலர்!
smile.gif

நாய்க்கு வந்த சோதனை



கண்ணியப்பனின் மனைவி வேலம்மா, எலிகளை ஒழிக்க ஒரு பூனையை வளர்க்கலாம் என்று சொன்னாள். அத்துடன் திருடர்களின் தொல்லையிலிருந்து தப்பிக்க ஒரு நாயை வளர்க்கலாம் என்றும் யோசனைச் சொன்னாள்.

நல்ல யோசனைதான். உடனே செயல்படுத்த வேண்டியது தானே என்று கண்ணியப்பன் கூறினான்.

ஊட்டமாக வளர்ந்திருந்த பூனை மியாவ், மியாவ் என்று கத்திக் கொண்டு வீட்டைச் சுற்றி வந்தது. பயந்து போன எலிகள் கண்ணியப்பனின் வீட்டை விட்டு வெளியேறின. கண்ணியப்பனும், வேலம்மாவும் மகிழ்ந்தனர்.

அப்பாடா எலித் தொல்லைகள் ஒழிந்தது என கண்ணியப்பன் நிம்மதி அடைந்தான்.

ஒரு கட்டத்தில் கண்ணியப்பனின் வீட்டில் எலிகளே இல்லை என்ற நிலை உருவானது. என்றாலும் பூனை இருவு முழுவதும் கத்திக் கொண்டே இருந்தது.

ச்சே... இந்தப் பூனையோட தொல்லை தாங்க முடியவில்லை. கண்ணியப்பனுக்கு இரவுத் தூக்கம் முற்றிலும் கெட்டுப் போனது.

இங்கே பார்... இனிமேல் கத்தினால் உன்னைக் கொன்றுவிடுவேன் ஜாக்கிரதை என்று குச்சியை எடுத்து பூனையை இரண்டு சாத்து சாத்தினான் கண்ணியப்பன்.

இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்த நாய் நடுங்கிப் போனது. அதன் மனதில் ஐயய்யோ.... சத்தம் போட்டால் நம்ம எஜமானருக்கு பிடிக்காது போலிருக்கு. இனிமே நாம வாயை திறக்கக் கூடாது என நினைத்துக் கொண்டது.

அன்றிரவு திருடர்கள் கண்ணியப்பன் வீட்டில் புகுந்து பொருட்களை களவாடி ஒரு மூட்டையில் கட்டிக் கொண்டுச் சென்றனர். இதையெல்லாம் அந்த நாய் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது.

உடனே திருடர்கள் ஏம்பா... கபாலி, அது என்ன நாய்டா...? ரொம்ப அமைதியா இருக்கு. எப்படியோப்பா, எல்லா வீட்டுலயும் இதே மாதிரி நாய் இருந்தால் நம்ம வேலை சுலபமா முடிந்து விடும்.

மறு நாள் களவு போயிருப்பதை அறந்த கண்ணியப்பன் அதிர்ச்சி அடைந்தான். இந்த வீட்டில் நாய் இருந்துமா இந்த அநியாயம் நடந்திருக்கு. எங்க அந்த நாய்? ஏய்... வாயை மூடிக் கொண்டு இருந்தாயா? உன்னால் சத்தம் கூட போட முடியவில்லையா? திருடனைப் பார்த்து குரைக்கத் தெரியாத நாய் என்ன நாய்? என தடியை எடுத்து நாயை அடித்து நொறுக்கினான். எங்கேயாவது ஓடித் தொலை. இந்தப் பக்கம் மீண்டும் பார்த்தால் கொன்று விடுவேன் என்று கூறினான்.

ச்சே... என்ன உலகம் இது. கத்தினாலும் அடிக்கிறார்கள், வாயை மூடிக் கொண்டிருந்தாலும் உதைக்கிறார்கள். என்னதான் செய்வது என புலம்பிய படியே நாய் தன் கால் போன போக்கில் சென்றது.

நன்றி தினமணி!

Saturday 18 July 2009

நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலவில் கால் வைத்து நாளை 40 ஆண்டுகள் நிறைவுபெறுகிறது. .



''இது ஒரு மனிதனைப் பொறுத்தவரை சிறிய காலடி . ஆனால் , மனித இனத்துக்கு இது பாரிய பாய்ச்சலாகும் ''
- நீல் ஆம்ஸ்ட்ரோங்

ஏமாந்த பூனை...



ஓர் வீட்டில் ஒரு பூனை இருந்தது.

ஒரு நாள் அந்தப் பூனை ஓர் எலியைப் பிடித்தது. எலியைக் கடித்துத் தின்ன விரும்பியது.

எலி பூனையைப் பார்த்து, " பூனை மாமா! பூனை மாமா! பல்லைத் துலக்கி வந்து என்னைச் சாப்பிடுங்கள். நான் மிகவும் ருசியாக இருப்பேன் ". என்று கூறியது.

பூனை, " சரி. இங்கேயே இரு. நான் குளிக்கும் அறைக்குப் போய், பல் துலக்கி வருகிறேன் ". என்று சொன்னது.

" சரி, சீக்கிரம் வந்து என்னைச் சாப்பிடுங்கள் ". என்று எலி கூறியது. பூனை குளிக்கும் அறைக்குள் போயிற்று.

எலி துள்ளிக் குதித்து ஓடி மறைந்து விட்டது. பூனை ஏமாந்து போனது.


நன்றி பாலர்போதினி.

Sunday 5 July 2009

லியொனார்டோ டா வின்சி


லியொனார்டோ டா வின்சி (Leonardo da Vinci, ஏப்ரல் 15, 1452 - மே 2, 1519) ஒரு புகழ் பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக்கட்டிடக்கலைஞரும், கண்டுபிடிப்பாளரும், பொறியியலாளரும், சிற்பியும், ஓவியரும் ஆவார். ஒரு பல்துறை மேதையாகக் கருதப்பட்டவர். குறிப்பாக இவரது, சிறப்பான ஒவியங்களுக்காகப் பரவலாக அறியப்பட்டவர். "கடைசி விருந்து" (The Last Supper), "மோனா லிசா" (Mona Lisa) போன்ற ஒவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. உரிய காலத்துக்கு மிக முன்னதாகவே செய்யப்பட்ட பல கண்டுபிடிப்புக்கள் தொடர்பிலும் இவர் பெயர் பெற்றவர். எனினும் இவரது காலத்தில் இவை எதுவும் வெளியிடப்படவில்லை. அத்துடன் இவர், உடற்கூற்றியல், வானியல் மற்றும் குடிசார் பொறியியல் துறைகளின் வளர்ச்சியிலும் பெரும்பங்கு ஆற்றியுள்ளார்

வால்ட் டிஸ்னி


வால்ட் டிஸ்னி (டிசம்பர் 5 , 1901 - டிசம்பர் 15, 1966) உலகப் புகழ் பெற்ற ஓவியர். மிக முக்கியமானகார்ட்டூன் ஓவியர். மிக்கி மௌஸ், டொனால்ட் டக், ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றை உருவாக்கியவர். திரைப்பட இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தவர்.

தொமஸ் அல்வா எடிசன்


தொமஸ் அல்வா எடிசன் (பெப்ரவரி 11, 1847அக்டோபர் 18, 1931) ஒரு அமெரிக்கக்கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் பல முக்கியமான சாதனங்களை உருவாக்கினார். "மென்லோ பூங்காவின் மந்திரவாதி" பெரும்படித் தயாரிப்புக் கொள்கையைக் கண்டு பிடிப்புக்களின் உருவாக்கத்துக்குப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர்.1880 ல் எடிசன் அறிவியல் சார்ந்த பத்திரிகை ஒன்றை ஆரம்பித்தார். இது 1900 ஆவது ஆண்டில்அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் (American Association for the Advancement of Science) பத்திரிகை ஆனது.


தனது பெயரில் சாதனை அளவான 1093 உரிமங்களைப் பதிவு செய்த எடிசன், பெரிமளவு கண்டு பிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவற்றுள் பெரும்பாலானவை இவரால் புதிதாக உண்டுபண்ணப்பட்டவை அல்ல, முன்னைய உரிமங்களில் ஏற்படுத்திய சீரமைப்புக்களாகும். இவையும் பெரும்பாலும் இவரது பெருமளவிலான ஊழியர்களால் செய்யப்பட்டவை. இக்கண்டு பிடிப்புக்களுக்கான பெருமையில் மற்றவர்களுக்குரிய பங்கைக் கொடுக்காதமைக்காக எடிசன் அடிக்கடி விமர்சிக்கப்ப்ட்டார். இருந்தாலும், எடிசன் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் உரிமங்களைப் பெற்றார். எடிசன் நம்பிக்கை நிதியம் (Edison Trust) எனப் பொதுவாக அறியப்பட்ட, ஒன்பது முதன்மையான திரைப்படக் கலையகங்களின் கூட்டமைப்பான அசையும் பட உரிமக் கம்பனியை (Motion Picture Patent Company) ஆரம்பித்தார்.

நன்றி - http://ta.wikipedia.org/wiki/தாமஸ்_அல்வா_எடிசன்

ஈர்ப்பு விதி கண்டுபிடிப்பு


நியூட்டன் ஆப்பிள்(அப்பிள்) மரமொன்றின் கீழ் இருந்தபோது, அப்பிள் பழமொன்று அவர் தலையில் விழுந்ததாகவும், இது அவர் சிந்தனையைக் கிளறி, புவிசார்ந்த, விண்வெளி சார்ந்த ஈர்ப்புபற்றிய எண்ணக்கரு உதித்ததாகவும் கதை நிலவுகிறது. இது அவரது சொந்தக் கதையான, வூல்ஸ்தோர்ப் மனோரின்யின் யன்னலோரம் இருந்து அப்பிள் மரத்திலிருந்து விழுந்ததைக் கவனித்த கதையை மிகைப் படுத்திக் கூறியதாகும் எனக் கருதப்படுகிறது. நியூட்டனின் கதையும், பிற்காலத்தில் அவரால் கட்டப்பட்டது என்பது பலருடைய கருத்து.

1667 ல், தனது கண்டுபிடிப்புக்களை, முடிவிலித் தொடர்கள் மூலமான பகுப்பாய்வு பற்றி (De Analysi per Aequationes Numeri Terminorum Infinitas) என்னும் வெளியீடு மூலமும், பின்னர் தொடர்களினதும், பிளக்ஸியன்களினதும் வழிமுறைகள் பற்றி (De methodis serierum et fluxionum ) மூலமும் வெளிக்கொணர்ந்தார்.

நியூட்டனும், லீப்னிசும் நுண்கணிதக் கோட்பாடுகளைத் தனித்தனியே உருவாக்கியதுடன், வெவ்வேறு குறியீடுகளையும் பயன்படுத்தினார்கள். நியூட்டன் அவருடைய வழிமுறைகளை லீப்னிசுக்கு முன்னரே உருவாக்கியிருந்தும், பின்னவருடைய குறியீடுகளும்,வகையீட்டு வழிமுறை"யும், மேம்பட்டதாகக் கருதப்பட்டுப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. நியூட்டன், அவர் காலத்தைச் சேர்ந்த மிகத் திறமையான அறிவியலாளருள் ஒருவராக இருந்தும், அவருடைய கடைசி 25 வருடங்கள், லீப்னிசுடனான பிரச்சினைகளால் பாழாக்கப்பட்டது. லீப்னிஸ் தன்னுடைய கண்டுபிடிப்புக்களைத் திருடியதாக அவர் குற்றஞ்சாட்டி வந்தார்.

1669 ல், கணிதத்துக்கான லூக்காசியன் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்டார். இவருடைய இந்தப்பதவி இவர், கல்லூரியின் ஆய்வாளாராக(Fellow) நீடிப்பதற்குத் தேவாலயத்துக்குச் செல்லவேண்டுமென்ற விதியிலிருந்து விலக்குப் பெற்றதுடன், அவருடைய எதிர்-திரி(கிறி?)த்துவவாதக் கருத்துக்கள் காரணமாக மரபுவாதத் தேவாலயத்துடன் ஏற்படவிருந்த முரண்பாடுகளையும் தவிர்த்துக்கொண்டார்

நன்றி -http://ta.wikipedia.org/wiki/ஐசக்_நியூட்டன்