Saturday 19 September 2009

காமெடி ஸ்டேஷன்

( இரண்டு பெண் யானைகள் )
வித்யா : நீ எப்படி டீ ஸ்லிம்மா இருக்கே ? நான் யானை மாதிரி குண்டா இருக்கேன்னு என் பிரெண்ட்ஸ் எல்லாரும் கிண்டல் பண்றாங்க ....
ஐஸ்வர்யா : நான் டயட்ல இருக்கேன். காலையில அஞ்சு கிலோ இலை , மதியம் எட்டே எட்டு கரும்பு . ராத்திரி புட்பால் சைஸ்ல சத்து உருண்டை ஆறேழு ... அவ்ளோதான் என்னோட ஒரு நாள் சாப்பாடு !
வித்யா : அடப்பாவி . இதெல்லாம் சேர்த்து சாப்பிட்டாகூட என்னோட ஒரு வேளைப் பசித்தான் அடங்கும் . அப்படினா மீதி நாலு வேலைக்கு என்ன பண்ணுவேன்!? ஆளை விடு உன்கூட சேர்ந்தேன்னா , யானையா வந்த நான் உடம்பு குறைஞ்சு , தும்பிக்கை உள்ள பூனையாதான் ஊருக்குத் திரும்பிப் போவேன் . வுடு ஜூட் !

( அஸோக் , ராஜா என்ற இரண்டு யானைகள் ...)
ராஜா : என்னப்பா ! கரும்பைச் சாப்பிடாம அப்படியே வெச்சிருக்க ?
அஸோக் : எனக்கு வேண்டாம்பா!
ராஜா : ஏன் , கரும்பு தின்னக் கூலி வேணுமா ?
அஸோக் : நீ வேறா , எனக்கு ' சுகர் ' இருக்குப்பா ! கரும்பை கண்ணாலகூட பார்க்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு . நீ வேற டென்சன் ஆக்காத ! எனக்கு ரத்த அலுத்தம்வேற இருக்கு .
ராஜா : அடப்பாவி ! நீ ஒரு மாசம் இங்கே வந்ததுக்கு பதிலாக ஏதாவது ஆஸ்பத்திரிக்குப் போய் அட்மிட் ஆயிருக்கலாம் .
( இரண்டு குட்டி யானைகள் )
சுமதி : அடுத்த ஒலிம்பிக்ஸ்ல நான் கலந்துக்கலாம்னு இருக்கேன் .
ராணி : அப்படியா , என்ன கேம்?
சுமதி : வெயிட் லிப்டிங் .
ராணி : அப்ப , நானும் ஒரு விளையாட்டுல கலந்துக்கப்போறேன் .
சுமதி : என்ன விளையாட்டு ?
ராணி : நம்ம தும்பிக்கையை வைச்சு ஈஸியா விளையாடலாமே ... ஹாக்கி !