Tuesday 26 January 2010

ஹைத்தி தீவில் நிலநடுக்கம்



அமெரிக்காவின் ஹைத்தி தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாயினர்.


அமெரிக்க ஐக்கிய நாடுகள் அருகில் கரீபிய கடலில் அமைந்துள்ள நாடான ஹைத்தி தீவில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. ஹைத்தி தலைநகர் போர்ட்-ஆப் பிரின்சில் பூமிக்கு 10கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் நகரின் பெரும்பாலான கட்டிடங்கள் சரிந்து விழுந்தன.


ஹைத்தி நாட்டின் அதிபர் மாளிகை, ஐ.நா.சபை அலுவலகங்களும் இடிந்து விழுந்தன.கடைகள், வீடுகள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் ஆகிய இடிந்துவிழுந்தன. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழ்திருப்பார்கள் என அஞ்சப்படுகிறது.

மீட்புப்பணியின் போது இடிபாடுகளில் சிக்கி இறந்துபோன ஆயிரம் பேரின் உடல்கள் கிடைத்துள்ளன. ரிக்கடர் அளவுகோளில் 7.3 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அண்டைநாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணப்பட்டுள்ளது. அங்கெல்லாம் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

உலகில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்று என்று நிலநடுக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment