Tuesday 27 May 2014

மனித உடல் தொகுதிகள்

நரம்புத் தொகுதி


நரம்புத்தொகுதியானது மூளை மற்றும் முண்ணாணை க்கொண்ட மைய நரம்புத் தொகுதியையும், அதிலிருந்து செயற்படு உறுப்புக்களான தசை போன்ற உறுப்புக்களுக்குச் செல்லும் நரம்புகள், மற்றும் உணர் உறுப்புக்களிலிருந்து மையநரம்புத் தொகுதியை நோக்கிச் செல்லும் நரம்புகள்போன்றவற்றை உள்ளடக்கிய புற நரம்புத் தொகுதியையும் கொண்டதாக இருக்கும்.
இதில் மூளையே சிந்தனை, உணர்ச்சிகள், நினைவாற்றல் போன்றவற்றைக் கொண்டதாகவும், உணர்வு உறுப்புக்களின் தொழிற்பாட்டை செயற்படுத்துவதாகவும் இருக்கும் முக்கிய உறுப்பாகும். அத்துடன் எல்லா உடல் தொகுதிகளின் தொழிற்பாடுகளையும், அவற்றிற்கிடையிலான தொடர்பாடலையும் கட்டுப்படுத்துகின்றது.

எலும்புக்கூட்டுத் தொகுதி


மனித எலும்புக்கூட்டுத் தொகுதியானது, முதிர்ந்த மனிதனில் 206 எலும்புகளைக் கொண்டிருப்பதுடன், முக்கியமான ஆறு தொழில்களைச் செய்கின்றது. அவையாவன:
·         உடலுக்கான ஆதாரத்தை வழங்கல்
·         தசைத் தொகுதியுடன் இணைந்து உடல் அசைவுகளுக்கு உதவுதல்
·         மூளை, முண்ணாண், இதயம், நுரையீரல் போன்ற முக்கியமான உள்ளுறுப்புக்களுக்குப் பாதுகாப்பை அளித்தல்
·         குருதி உயிரணுக்களை உற்பத்தியாக்கல்
·         கல்சியம், இரும்பு போன்ற அயனிகளைச் சேமித்தல்
·         ஒஸ்ரியோகல்சின் எனப்படும் ஒரு இயக்குநீரைச் சுரப்பதன் மூலம் குருதிச் சர்க்கரை அளவு, கொழுப்புப் படிவு அளவு போன்ற சில செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துகின்றது[1].

உணர்வுத் தொகுதி


உணர்வுத் தொகுதியானது நரம்புத்தொகுதியுடன் இணைந்தே செயற்படுவதனால், சில இடங்களில், இது தனியான தொகுதியாகக் குறிப்பிடப்படாமல், நரம்புத் தொகுதியினுள்ளேயே சேர்க்கப்பட்டு நரம்புத் தொகுதியும் புலன் உறுப்புக்களும் (உணர் உறுப்புக்களும்) என்று பொதுப் பெயரில் குறிப்பிடப்படுகின்றது.
உணர்வுத் தொகுதியின் செயற்பாட்டினால் பார்வை (vision), கேள்வி உணர்வு (hearing), சுவை (taste), முகர்ச்சி (smell), தொட்டுணர்வு (touch) போன்ற உணர்வுச் செயற்பாடுகள் நிகழ்கின்றன. இச்செயற்பாடுகளுக்கான உறுப்புக்களாக முறையே கண், காது, நாக்கு, மூக்கு, தோல் என்ற உறுப்புக்கள் இருக்கின்றன. இவற்றில் தோலானது குளிர், வெப்பம், தொடுகை, வலி போன்றவற்றை உணரும் உறுப்பாக