Saturday 25 October 2014

டுடே லொள்ளு



பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்கள்,சிறுகதைகள் இலவசமாக டவுன்லோட் செய்ய

சுஜாதா தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமானவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா. 
ஸ்ரீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த 

நிறுவனங்களுக்குத் தலைவலியாகும் Whatsapp & Viber

ணையம் வந்த பிறகு மக்களின் அன்றாட நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் வந்துள்ளது. இணையத்தின் பயன்பாடு அதிகரிக்கும் போது ஒரு வகையில் பலருக்கு பயனைக் கொடுத்தாலும் இன்னும் சிலருக்கு இது வினையாக முடிந்து இருக்கிறது. இவ்வளவு நாள் சில விசயங்களில் கொள்ளை அடித்து மக்களை ஏமாற்றிக் கொண்டு இருந்த கைத்தொலைபேசி நிறுவனங்களுக்கு தலைவலியாகி வருகிறது Whatsapp, Viber போன்ற கைத் தொலைபேசி செயலிகள் (Apps). இது பற்றி பார்ப்போம்.

முன்பு Whatsapp நிறுவனம், வளர்ந்த நாடுகளில் பிரபலமாக இருந்தது பின் இந்தியாவிலும் பிரபலமாகத் தொடங்கியது. பிரபலமான ஃபேஸ்புக் நிறுவனம் 16+3 பில்லியனுக்கு Whatsapp ஐ விலைக்கு வாங்கியதும் இதன் பயன்பாடு உச்சத்தை அடைந்து விட்டது. தற்போது Whatsapp என்ற பெயரை அடிக்கடி நீங்கள் கேட்க நேர்வதே இதன் பிரபலத்திற்கு சாட்சி. வளர்ந்த நாடுகளில் பிரபலமான போதே Whatsapp பயன்பாட்டால் இங்கிலாந்து கைப்பேசி நிறுவனங்களுக்கு பில்லியன்

வேற்றுகிரகவாசிகளை எப்போது நாம் சந்திப்போம்?


கடந்த மாதம்  அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான
நாசா காணொளி(வீடியோ) ஒன்றை தனது இணையதளத்தில் வெளியிட்டது.
அதில் நிலவில் மனித உருவம் நடப்பது போன்ற காட்சிகள் உள்ளன
.அது வேற்றுகிரகவாசியாக இருக்கலாமோ என்ற பரபரபரப்பை உலக
 முழுவதும் ஏற்படுத்தியது.
அந்த வீடியோ யூடியுப் தளத்தில் பதிவேற்றபட்டது ... சில நாட்களிலேயே
 உலக முழுவதும் 20 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பார்த்து சிலர் பரவசபட்டார்கள்,
சிலர் இது ஏமாற்றுவேலை என்று நம்ப மறுத்தார்கள். கடைசியில்
 அது வெறும் தூசுதான் என்று விளக்கமளித்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
      இதே போன்று சில தினங்களுக்கு முன்னாள் அமெரிக்காவின்
 டெக்ஸாஸ் மாநிலத்தின் ஹௌஸ்டன் நகர

2015 ல் விண்டோஸ் 10 அறிமுகம்

grey இணையத் தொழில்நுட்பச் செய்திகள் [07 10 2014]மைக்ரோசாஃப்ட் தனது அடுத்த இயங்கு தளத்தை (Operating sytem) அறிமுகப்படுத்தியிருக்கிறது. மைக்ரோசாஃப்ட் வழக்கமான தனது முறையில் இருந்து மாறி முதல் முறையாக PC / Mobile / Tablet support என்ற வசதியுடன் “விண்டோஸ் 8″ ஐ அறிமுகப்படுத்தியது ஆனால், “விண்டோஸ் 7” போல அனைவரிடமும் வரவேற்பை பெறவில்லை குறிப்பாக நிறுவனங்களிடையே ஆதரவே இல்லை. எனவே அடுத்த வெளியீடை குறுகிய காலத்திலேயே அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. “விஸ்டா” போல தோல்வி இல்லையென்றாலும் “விண்டோஸ் 7″ போல வெற்றி இல்லை. அதோடு இதில் ஸ்டார்ட் பட்டன், Command prompt போன்றவை இல்லை இதுவும் பெரிய குறையாக கருதப்பட்டது.
இந்த நிலையில் புதிய பதிப்பு வெளியிடப்போவதாக மைக்ரோசாஃப்ட் கூறியதும் பலரும் இதன் அடுத்த பெயர் “விண்டோஸ் 9″ என்று கூறத் தொடங்கி இருந்தார்கள் ஆனால், மாறாக மைக்ரோசாஃப்ட் “விண்டோஸ் 10″ என்று அறிவித்து இருக்கிறது. ஏன் விண்டோஸ் 9 இல்லை? என்று அனைவருமே குழம்பினார்கள். இதற்குக் காரணமாக விண்டோஸ் 8 ன் மீது இருக்கும் ஒரு வெறுப்பை இது போல தள்ளி வைத்து தூரப்படுத்துகிறது மைக்ரோசாஃப்ட் என்று கூறப்படுகிறது. அதோடு புதிய வெளியீட்டில் விடுபட்ட ஸ்டார்ட் பட்டன், command prompt போன்றவை திரும்ப கொண்டு வந்து இருக்கிறது. 2015 ல் தான் “விண்டோஸ் 10″ அனைவருக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday 24 October 2014

சம்சுங் மொபைலில் முக்கியமான குறியீட்டு எண்கள்



இன்றைய கையடக்க தொலைபேசியின் வளர்ச்சியின் சிகரம் தொட்டு இருக்கின்றது சம்சுங் நிறுவனம். அந்நிறுவனத்தின் தயாரிப்புகள் நாளுக்கு நாள் புதுமைகளை எமக்கு அறிமுகம் செய்கின்றது.

இன்று சம்சுங் மொபைல் பெரும் வரவேற்பை மக்களிடையே கொண்டுள்ளது. சம்சுங் மொபைல் பயன்படுத்தும் நாம் அவசியமாக அறிந்து இருக்க வேண்டிய முக்கியமான குறியீடுகளை இன்றைய பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.


1)   *#9999#  
      -தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய.

2)   #*3849# 
      -தங்கள் சாம்சங் மொபைல் போனை மீண்டும்Rebootசெய்ய.

3)  *#06# 
      -சாம்சங் போனின்IMEI (EMI)எண்ணை அறிய. இது மிக முக்கிய ஓர் எண்ணாகும்.

4)  #*2558# 
      -தங்கள் போனின் கடிகாரத்தை இயக்க அல்லது நிறுத்த. தங்கள் போனின் மொபைல் போனின் டைமை ஆன் செய்ய அல்லது ஆப் செய்ய.

5)  #*7337# 
     -தங்கள் அண்மைகால சாம்சங் மொபைல் போனை அன்லாக் செய்ய(UnLock).

6)  #*4760# 
     -தங்களில் போனில்GSM Featuresயை இயக்க அல்லது நிறுத்த.

7)  *#9998*246# 
     -தங்கள் போனின் மெமரி திறன் மற்றும் பேட்டரியின் திறனை அறிய.

8)  *#7465625# 
     -தங்கள் போனின் கடவுசொல் நிலைமை அறிய.

9)  *#0001# 
     -தங்கள் போனின் சீரியல் எண்ணை காண.

10)  *#2767*637# 
       -தங்கள் மொபைல் போனை அன்லாக் செய்ய.

11)  *#8999*636# 
       -தங்கள் போனின் சேமிப்பு கொள்ளலவு நிலைமையை காண.

12)  *#8999*778# 
       -தங்கள் சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய.

13)  #*#8377466# 
       -தங்கள்போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும்Versionயை அறிய.

14)  #*3888# 
       -சாம்சங் போன்களின்Bluetoothயின்தகவல்களைஅறிய.

15)  #*5376# 
   -ஒரே கட்டளையில் தங்கள் போனின் அனைத்து மெசேஜ்யும் ஒரே கட்டளையில் நீக்க அல்லது அழிக்க.

16)  #*2472# 
       -தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய.

ஒரு சில கோடுகள் சில போன்களில் இயங்காது.