Sunday 2 November 2014

"ஒபாமா" முகமூடி அணிந்து அமெரிக்க ஹோட்டலில் கொள்ளையடித்த திருடன்!

 நியூயார்க்: அமெரிக்காவில் அதிபர் ஒபாமா போன்று முகமூடி அணிந்து கொண்டு துப்பாக்கி முனையில் கொள்ளையன் ஒருவன் ஹோட்டலில் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவில் மசாச்சுசெட்ஸ் மாகாணத்தில் சலேம் என்ற நகரில் ஒரு துரித உணவு ஓட்டலில் வியாபாரம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது அமெரிக்க அதிபர் ஒபாமா முகமூடி அணிந்த வாலிபர் ஒருவர் சாப்பிட வந்தார். திடீரென அவர் துப்பாக்கியை காட்டி மிரட்டினார். 

இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதைப் பயன்படுத்தி அந்த நபர் ஓட்டலில் இருந்த பணப் பெட்டியை கொள்ளையடித்து சென்று விட்டார். இக்காட்சி கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது.

 அதற்கு முன்னதாக ஒரு அங்காடியில் புகுந்து வேறு ஒரு நபரின் முகமூடி அணிந்து துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து இருக்கிறார்https://www.youtube.com/watch?v=qhGQ7ruWaMs

மலேசிய விமானம் மாயம்: விமான போக்குவரத்து துறைக்கு எதிராக பயணியின் மகன்கள் வழக்கு

 கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானம் எம்,.ஹெச் 370ல் பயணித்த தன் தந்தை தொடர்பாக எந்த விதத் தகவலும் தெரிவிக்கவில்லை என்பதால், மலேசியாவைச் சேர்ந்த இரு சிறுவர்கள், மலேசிய ஏர்லைன்ஸ் மற்றும் அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

 கடந்த மார்ச் 8ம் தேதி கோலாலம்பூர் முதல் பீஜிங் வரை சென்று கொண்டிருந்த எம்ஹெச் 370 விமானம் மாயமாகி 8 மாதங்கள் ஆகின்றன. அதன் பிறகு, இந்த விமானத்தில் காணாமல்

நீங்க எப்போ இறந்து போவீங்க?... இந்த வாட்ச் சொல்லுமாம்!....

மனிதன் இந்த உலகத்தில் வாழும் வாழ்நாளை குறிக்கும் தொழில்நுட்பத்தில் வெளியாகியுள்ளது டிக்கர் என்ற கைக்கடிகாரம்.
பெட்ரிக் கோல்டிங் (batric Kolding) என்பவர் டிக்கர் (Tikker) என்ற கைக்கடிகாரத்தை தயாரித்து உள்ளார்.

 இந்த கைக்கடிகாரத்தில், உதரணமாக‌ 41 வருடம், 3 மாசம், 4 நாள், 7 மணிநேரம், 5 நிமிடம், 19 நொடியில‌ நீங்க இறந்து விடுவீர்கள் என்று காட்டும்.
இப்படி ஒரு கைக்கடிகாரத்தை அறிமுகப்படுத்திய பெட்ரிக் கோல்டிங் கூறியதாவது, மனித‌ வாழ்க்கையில் இறப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்று, ஆனால் நாம் எல்லோரும் நமக்கு இருக்கிற ‌ இந்த விலை மதிப்பில்லாத‌ நேரத்தை சரியாக பயன்படுத்துவது இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த டிக்கர் 

பெண்களுடன் ஜாலியாக செல்ஃபியில் போஸ் கொடுத்த பேய்!...

பிரித்தானியாவில் பெண்கள் இருவர் எடுத்த செல்ஃபி புகைப்படத்தில் பேயும் சேர்ந்து போஸ் கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் நியூகாஸில்(New Castle) நகரை சேர்ந்த கேலே அடிக்சன்(Kayley Atkinson Age-22) மற்றும் அவரது தோழி விக்டோரியா(Victoria Age-22) கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவில் செல்ஃபி புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளனர்.

அந்த புகைப்படத்தில் அவர்கள் மட்டுமின்றி, பின்புறத்தில் கூடுதலாக மூதாட்டி ஒருவர் பேய் மாதிரி நின்று கொண்டிருந்துள்ளார்.

இதுகுறித்து விக்டோரியா கூறுகையில், நான் இந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்தேன் என்றும், உடனே கேலே கைப்பேசியில் தொடர்பு கொண்டு புகைப்படத்தில் பேய் இருப்பதை நன்கு கவனிக்கும்படி கூறினாள் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுவரை எனக்கு பேய்களின் மீது அதிக நம்பிக்கை இல்லை என்றாலும், இதை பார்த்தவுடன் நம்பிக்கை வந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.

https://www.youtube.com/watch?v=BJuVyQNwv48

பெண்களுடன் ஜாலியாக செல்ஃபியில் போஸ் கொடுத்த பேய்!...

Published:Saturday, 01 November 2014, 16:16 GMTUnder:Invention
பிரித்தானியாவில் பெண்கள் இருவர் எடுத்த செல்ஃபி புகைப்படத்தில் பேயும் சேர்ந்து போஸ் கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் நியூகாஸில்(New Castle) நகரை சேர்ந்த கேலே அடிக்சன்(Kayley Atkinson Age-22) மற்றும் அவரது தோழி விக்டோரியா(Victoria Age-22) கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவில் செல்ஃபி புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளனர்.
அந்த புகைப்படத்தில் அவர்கள் மட்டுமின்றி, பின்புறத்தில் கூடுதலாக மூதாட்டி ஒருவர் பேய் மாதிரி நின்று கொண்டிருந்துள்ளார்.
இதுகுறித்து விக்டோரியா கூறுகையில், நான் இந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்தேன் என்றும், உடனே கேலே கைப்பேசியில் தொடர்பு கொண்டு புகைப்படத்தில் பேய் இருப்பதை நன்கு கவனிக்கும்படி கூறினாள் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை எனக்கு பேய்களின் மீது அதிக நம்பிக்கை இல்லை என்றாலும், இதை பார்த்தவுடன் நம்பிக்கை வந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
- See more at: http://www.manithan.com/news/20141101112857#sthash.EUpLVwCs.dpuf