Thursday, 27 March 2014

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு தடை

ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) போட்டிகளில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. 

அத்துடன், சீனிவாசனுக்கு பதிலாக கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய இடைக்கால தலைவரை நியமிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

கடந்த ஐ.பி.எல். 6ஆவது போட்டியின் போது சூதாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை அறிக்கையை நீதிபதி முத்கல் கமிட்டி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் மீது சூதாட்டத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட பல முறைப்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

இதனால் நேர்மையான விசாரணை நடைபெற கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் கண்டிப்புடன் கூறியிருந்தது. அத்துடன் சீனிவாசன் விலகாவிட்டால் அவர் பதவி விலக உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்திருந்தது.

ஆனால் சீனிவாசனோ, என்னை கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியில் இருந்து யாரும் நிர்பந்தப்படுத்தி வெளியேற்றிவிட முடியாது என்று சவால்விட்டார். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது முத்கல் கமிட்டி பரிந்துரைப்படி தவறிழைத்தோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தயராக இருக்கிறோம் என்றும் சீனிவாசன், தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கி இருப்பார் என்றும் உச்சநீதிமன்றத்தில் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. 
அப்போது குறுக்கிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், கிரிக்கெட்டின் நலன் கருத்தி கடினமான உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் என்று எச்சரித்தனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோணி, முத்கல் கமிட்டியிடம் பொய்யான வாக்குமூலம் கொடுத்திருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றம் சில அதிரடியான யோசனைகளைத் தெரிவித்து கிரிக்கெட் வாரியத்தின் பதிலைக் கோரியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் அதிரடி பரிந்துரைகள்:

- இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்காலத் தலைவராக சுனில் கவாஸ்கர் அல்லது மூத்த கிரிக்கெட் வீரர் ஒருவரை நியமித்தல்.

- என்.சீனிவாசனுக்குச் சொந்தமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடையோர் எவருமே இந்திய கிரிக்கெட் வாரியத்தில் இடம்பெறக் கூடாது.

- ஐ.பி.எல். சூதாட்ட குற்றச்சாட்டில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மறு உத்தரவு வரும் வரை நடப்பாண்டு ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடக் கூடாது.

இந்த பரிந்துரைகளுக்கான பதிலை கிரிக்கெட் வாரியம் நாளை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.

கிரிக்கெட் வாரியத்தின் நாளைய பதிலைத் தொடர்ந்து ஐ.பி.எல். பிக்ஸிங் வழக்கில் இடைக்கால உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்கவுள்ளது. 

Thursday, 20 March 2014

மர்மமான மலேசிய விமானம்! மாணவர்களால் கண்டுபிடிப்பு! இணையங்களில் வேகமாக பரவும் தகவல்!

kkk

மலேசிய விமானம் MH370 கடந்த 8ஆம் தேதி மாயமாய மறைந்து போனதை அடுத்து இந்நிமிடம் வரை அவ்விமானம் குறித்து பற்பல தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கும் இந்நிலையில் தைவான் பல்கலைக்கழக மாண்வர்கள் தற்செயலாக கூகுள் வரைபடத்தை பார்த்துக்கொண்டிருந்தபோது, தைவான் காடுகளுக்கு இடையே ஒரு விமானம் மறைந்து நின்று கொண்டிருப்பது தெரிய வந்தது.


இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவர்கள் அந்த விமானத்தை புகைப்படம் எடுத்து இணையத்தளங்கள் மூலம் வெளியிட்டுள்ளனர்.

எனினும்அந்த புகைப்படத்தில் இருப்பது மாயமான மலேசிய விமானம்தான் என்பது உறுதி செய்யப்படாதபோதிலும் அந்த விமானம் அதுவாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்களில் வேகமாக இத்தகவல்கள் பரவிவருகின்றன.

d
மேலும் இந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் மிகவும் தாழ்வாக ஒரு விமானம் பறந்து சென்றதை பார்த்ததாகவும் கூறினார்கள்.


மாலைதீவுக்கு அருகேயுள்ள Dhaalu Atoll என்ற தீவை சேர்ந்த பொதுமக்கள் பலர் விமானம் ஒன்று மிகவும் தாழ்வாக பறந்ததை பார்த்ததாகவும் கூறுகின்றனர்.

 இந்த பரபரப்பான செய்திகளால் மலேசிய விமான நிலைய அதிகாரிகள் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீவிர ஆலோசனை செய்து வருகின்றனர் எனவும் இணையத்தளங்களில் செய்திகள் பரவிவருகின்றன.

இருப்பினும் அநேகமாக இது ஒரு புரளியாகத்தான் இருக்க முடியும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Bi2jbJnCUAAJ6RR

1925207_10153973446000637_831154290_n Bi2jbJnCUAAJ6RR

Tuesday, 18 March 2014

பூங்கா சிறுவர் மடல் வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு

அன்பர்களுக்கு ,
நம் பூங்கா சிறுவர் மடல் Blog(ப்ளாக்)  நாளை முதல் ஏழாம் உலகம் .ப்ளாக்ஸ்போட் .காம் ஆக மாறவுள்ளது .  நம் வாசகர்கள் அனைவரும்  பதிவுகளை தொடர்ந்து பெறுவதற்கு www.ezhamulagam.blogspot.com    என்ற இணையதளத்திற்கு செல்லவும் .

poongasiruvarmadal.blogspot.com  ——–>   www.ezhamulagamblogspot.com

என்றும் அன்புடன்,
யாஸிர்  நிசாருதீன்

Saturday, 15 March 2014

மலேசிய விமானம் திட்டமிட்ட வகையில் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது -மலேஷியப் பிரதமர்



மலேசிய விமானம் திட்டமிட்ட வகையில் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது -மலேஷியப் பிரதமர்

காணாமல் போனதாக கூறப்படும் மலேஷிய பயணிகள் விமானத்தின் கட்டமைப்பு திட்டமிட்ட வகையில் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக மலேஷியப் பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.
செய்மதி மற்றும் ராடர் கட்டமைப்புக்களில்  பதிவான  தரவுகளின் பிரகாரம் விமானத்திலுள்ள ஒருவரால் திட்டமிட்ட வகையில் இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டமைக்கான உறுதியான புதிய ஆதாரம் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதன்மூலம் விமானம் காணாமல் போனமை தொடர்பான விசாரணை புதிய கோணத்தை எட்டியுள்ளதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் மலேஷியப் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்பிரகாரம் விமானத்திலிருந்த பணியாளர்கள் மற்றும் பயணிகள் குறித்து இந்த விசாரணைகளில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாகவும் நஜீப் ரசாக் குறிப்பிட்டுள்ளார்.
எம் ஏச் 370 என்ற குறித்த விமானம் 239  பேருடன் கடந்த சனிக்கிழமை காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த விமானத்தை தேடும் பணிகள் பன்நாட்டு ஒத்துழைப்புடன் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Friday, 14 March 2014

மாயமான மலேஷிய விமானம் குறித்த மர்மம் நீடிப்பு



மாயமான மலேஷிய விமானம் குறித்த மர்மம் நீடிப்பு

காணாமல் போன மலேஷிய விமானத்தை தேடும் பணிகளில்  உதவும் பொருட்டு அமெரிக்கா தனது கண்காணிப்புக் குழுக்களை  இந்து சமுத்திரத்திற்கு  அனுப்பியுள்ளது
குறித்த மலேஷிய விமானம் நீண்ட நேரம் இந்து சமுத்திரத்தின் மேலாக பயணித்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது
விமானம் காணமற்போவதற்கு முன் ஐந்து மணித்தியாலங்களுக்கு  செய்மதிக்கு சமிக்ஙை அனுப்பியுள்ளதாக பெயர் குறிப்பிடாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த தகவல் திட்டவட்டமானது அல்லவென விமானம் காணாமல் போனமை தொடர்பில் விசாரணை செய்யும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை 229 பயணிகளுடன் காணாமல் போன குறித்த விமானத்தின்  பாகங்களை கண்டறிவதில் மீட்பு பணியாளர்கள் தொடர்ந்தும் தோல்வி கண்டுவருகின்றனர்.

Thursday, 13 March 2014

போஸ்டரில் இருந்த பெண்ணின் கூந்தல் பறந்ததில் அதிர்ந்து போன டெல்லி மக்கள்!



போஸ்டரில் இருந்த பெண்ணின் கூந்தல் பறந்ததில் அதிர்ந்து போன டெல்லி மக்கள்! (படங்கள்)

டெல்லி ரயில் நிலையம் ஒன்றில் விளம்பரப் பலகையில் (போஸ்டரில்) உள்ள பெண்ணின் கூந்தல் காற்றில் அலைபாய்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மாயமந்திரமாக இருக்குமோ என பயந்துபோன மக்களுக்கு பின்பு தான் உண்மை தெரிந்துள்ளது, 

காணாமல் போன மலேஷிய விமானத்தை தேடும் பணிகள் இந்து சமுத்திரத்திற்கும் விஸ்தரிப்பு



காணாமல் போன மலேஷிய விமானத்தை தேடும் பணிகள் இந்து சமுத்திரத்திற்கும் விஸ்தரிப்பு

காணாமற்போன மலேஷிய பயணிகள் விமானம் தொடர்பான  தேடுதல் பணிகள் இந்து சமுத்திரத்திலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இந்து சமுத்திரத்தில்  முன்னெடுக்கப்படவுள்ள  தேடுதல் பணிகளில் அமெரிக்கா தனது  முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது
இதுவரை  விமானம் குறித்த புதிய தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை என  சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன
இதுவரை இது தொடர்பான தேடுதல் பணிகள் தென் சீன கடற்பிராந்தியத்திலும்,மலாக்கா நீரிணைப் பகுதியிலும் மெற்கொள்ளப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது
தமக்கு கிடைக்கப் பெற்ற புதிய  தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே காணாமல் போனதாக கூறப்படும் மலேஷிய  விமானத்தை தேடும் பணிகளை இந்து சமுத்திரத்தை நோக்கி நகர்தவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது
இந்த விமானம் கடந்த சனிக்கிழமை 239 பயணிகளுடன் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் – மர்மம் நீங்கியதா?


239 பயணிகளுடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ரஷ்யாவில் அதி நவீன தொழில் நுட்ப உதவியுடன் கடத்தப்பட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூருகின்றன.

கடத்தலின் நோக்கம்: உலக பொருளாதாரத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சீன செல்வந்தர்கள் 4 பேர் ரஷ்ய கடத்தல் கும்பலால் கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
 இவர்கள் 4 பேரும் ஒருசேர இந்த விமானத்தில் பயணித்ததை அறிந்த ரஷ்ய கடத்தல் கும்பலை சேர்ந்த 2 பேர் போலி கடவு சீட்டு மூலம் அந்த விமானத்தில் பயணித்து சீனா சென்று தரையிறங்கும் முன் அதிநவீன தொழில் நுட்பத்துடன் செயற்கைகோல் கண்ணில் படாமல் ரஷ்யாவிற்கு கடத்தி சென்றுள்ளனர்.

அந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உறவினர்கள் விமான நிலையத்தில் கூக்குரல் இட்டபோது சீன அரசாங்கம் பயணிகளின் உறவினர்களை விமான நிலையத்தில் இருந்து அகற்றி தனியார் விடுதியில் தங்க வைத்தனர். 
அவ்வுறவினர்களை ரகசியமாக விமான பயணிகளிடம் பேச வைத்துள்ளனர். இவ்வாறு மலேசிய அரசாங்கமும், சீன அரசாங்கமும் தங்கள் நாட்டிற்கு ரஷ்யா நட்பு நாடு என்பதாலும் இரு நாட்டிற்கும் அவபெயர் ஏற்படாமல் இருக்க இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
மேலும் 24 மணி நேரத்திற்குள் அனைத்து ஊடகங்களிலும் இந்த செய்தி இரு நாட்டு அரசாங்கமும் தெளிவு படுத்தும் என மலேசிய மற்றும் சீன ஏஜென்சி செய்திகள் கூறுகின்றன.
நன்றி - புரட்சி செய்திகள்

ஏலத்துக்கு வரும் சமாதானத்துக்கான நோபல் பரிசுப் பதக்கம்


ஏலத்துக்கு வரும் நோபல் பரிசுப் பதக்கம்
ஏலத்துக்கு வரும் நோபல் பரிசுப் பதக்கம்
தென்னமெரிக்க நகைக் கடை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட 1936 ஆம் ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசுப் பதக்கம் ஒன்று நியூயார்க்கில் ஏலத்துக்கு வரவுள்ளது.
பரகுவேக்கும் பொலிவியாவுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சமரச நடவடிக்கைகளை மேற்கொண்ட ஆர்ஜண்டீனாவின் வெளியுறவு அமைச்சரான கார்லொஸ் சாவேந்திரா லமாஸ் அவர்களுக்கு இந்த பதக்கம் வழங்கப்பட்டிருந்தது.
நிறையக் காலம் காணாமல் போயிருந்த இது, பின்னர் அமெரிக்க அரும்பொருட் சேகரிப்பாளர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டது.
23 காரட் தங்கத்தினாலான இந்தப் பதக்கம் ஒரு லட்சம் டாலர்களுக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

காணாமற்போன மலேசிய விமானம் தொடர்பு துண்டிக்கப்பட்ட பின்னரும் தொடர்ந்து பறந்துள்ளது!



காணாமற்போன மலேசிய விமானம் தொடர்பு துண்டிக்கப்பட்ட பின்னரும் தொடர்ந்து பறந்துள்ளது!
காணாமற்போன மலேசிய விமானத்தின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதன் பின்னர் சுமார் 4 மணித்தியாலங்கள் வரை விமானம் பயணித்திருக்கக்கூடும் என சந்தேகிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமான எஞ்சினின் தன்னிச்சையான தகவல் தரவேற்றம் மற்றும் அன்றாட  தகவல்  பரிமாற்றத் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, காணாமற்போன MH370 மலேசிய விமானத்தின் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கடைசியாகக் கிடைக்கப்பெற்ற தகவல், “All right, good night” என்பது தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவிலிருந்து வியட்நாமின் எல்லைப் பரப்பை அண்மித்தபோது விமானிகளில் ஒருவர் இந்தத் தகவல் பரிமாற்றத்தை மேற்கொண்டுள்ளார்.
இதன் பின்னரே குறித்த விமானம் ராடார் திரையிலிருந்து திடீரென மாயமாய்ப் போயுள்ளது.
இதைத் தொடர்ந்து, விமானம் குறித்த பலவிதத் தகவல்களும் வெளிவந்தவண்ணமுள்ளன. என்றாலும், விமானம் எங்குள்ளது என்பது குறித்து தற்போது வரை எவ்விதத் தகவல்களும் இல்லை.