Thursday, 21 August 2014
Friday, 15 August 2014
இளமைFM பெருமையுடன் வழங்கும் திருப்பு முனை திரைப்படம்
இளமைFM பெருமையுடன் வழங்கும் மிருணனின் இயக்கித்தில் பானுப்ரியன் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் திருப்பு முனை
பட தொகுப்பு:கஜா
ஒளிபதிவு:தினேஷ்
Official Teaser
Sunday, 1 June 2014
T-Side Media வழங்கும் CARROM தமிழ் குறுந்திரைப்படம்
இலங்கை தமிழ் இளம்இயக்குனர்களின் படைப்பே CARROM குறும்திரைப்படமாகும் .
இக்குறும்படத்தைபார்ப்பதக்கு
https://www.youtube.com/watch?v=l8_9I6IU_1o
இலங்கையில் தொடரும் சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இலங்கை நாட்டில் பல பகுதியிலும் தொடர்ந்து கடும் மழை பெய்துவருகின்றது.
பல இலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் தாழ் நிலபக் பகுதிகள் தொடர்ந்தும் நீரில் மூழ்கியுள்ளதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மத்துகம, அகலவத்தை மற்றும் கலவானை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கொழும்பு மாநகரின் சில வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அதிக மழையுடன் கூடிய வானிலையினால் மேலும் பல மாவட்டங்களில் அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லி மீற்றருக்கு மேற்பட்ட மழை வீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறுகின்றது.
Tuesday, 27 May 2014
மனித உடல் தொகுதிகள்
நரம்புத் தொகுதி
நரம்புத்தொகுதியானது மூளை மற்றும் முண்ணாணை க்கொண்ட மைய நரம்புத் தொகுதியையும், அதிலிருந்து செயற்படு உறுப்புக்களான தசை போன்ற உறுப்புக்களுக்குச் செல்லும் நரம்புகள், மற்றும் உணர் உறுப்புக்களிலிருந்து மையநரம்புத் தொகுதியை நோக்கிச் செல்லும் நரம்புகள்போன்றவற்றை உள்ளடக்கிய புற நரம்புத் தொகுதியையும் கொண்டதாக இருக்கும்.
இதில் மூளையே சிந்தனை, உணர்ச்சிகள், நினைவாற்றல் போன்றவற்றைக் கொண்டதாகவும், உணர்வு உறுப்புக்களின் தொழிற்பாட்டை செயற்படுத்துவதாகவும் இருக்கும் முக்கிய உறுப்பாகும். அத்துடன் எல்லா உடல் தொகுதிகளின் தொழிற்பாடுகளையும், அவற்றிற்கிடையிலான தொடர்பாடலையும் கட்டுப்படுத்துகின்றது.
எலும்புக்கூட்டுத் தொகுதி
மனித எலும்புக்கூட்டுத் தொகுதியானது, முதிர்ந்த மனிதனில் 206 எலும்புகளைக் கொண்டிருப்பதுடன், முக்கியமான ஆறு தொழில்களைச் செய்கின்றது. அவையாவன:
·
உடலுக்கான ஆதாரத்தை வழங்கல்
·
ஒஸ்ரியோகல்சின் எனப்படும் ஒரு இயக்குநீரைச் சுரப்பதன் மூலம் குருதிச் சர்க்கரை அளவு, கொழுப்புப் படிவு அளவு போன்ற சில செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துகின்றது[1].
உணர்வுத் தொகுதி
உணர்வுத் தொகுதியானது நரம்புத்தொகுதியுடன் இணைந்தே செயற்படுவதனால், சில இடங்களில், இது தனியான தொகுதியாகக் குறிப்பிடப்படாமல், நரம்புத் தொகுதியினுள்ளேயே சேர்க்கப்பட்டு நரம்புத் தொகுதியும் புலன் உறுப்புக்களும் (உணர் உறுப்புக்களும்) என்று பொதுப் பெயரில் குறிப்பிடப்படுகின்றது.
உணர்வுத் தொகுதியின் செயற்பாட்டினால் பார்வை (vision), கேள்வி உணர்வு (hearing), சுவை (taste), முகர்ச்சி (smell), தொட்டுணர்வு (touch)
போன்ற உணர்வுச் செயற்பாடுகள் நிகழ்கின்றன. இச்செயற்பாடுகளுக்கான உறுப்புக்களாக முறையே கண், காது, நாக்கு, மூக்கு, தோல் என்ற உறுப்புக்கள் இருக்கின்றன. இவற்றில் தோலானது குளிர், வெப்பம்,
தொடுகை, வலி போன்றவற்றை உணரும் உறுப்பாக
Thursday, 27 March 2014
சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு தடை
ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) போட்டிகளில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
அத்துடன், சீனிவாசனுக்கு பதிலாக கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய இடைக்கால தலைவரை நியமிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
கடந்த ஐ.பி.எல். 6ஆவது போட்டியின் போது சூதாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை அறிக்கையை நீதிபதி முத்கல் கமிட்டி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் மீது சூதாட்டத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட பல முறைப்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
இதனால் நேர்மையான விசாரணை நடைபெற கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் கண்டிப்புடன் கூறியிருந்தது. அத்துடன் சீனிவாசன் விலகாவிட்டால் அவர் பதவி விலக உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்திருந்தது.
ஆனால் சீனிவாசனோ, என்னை கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியில் இருந்து யாரும் நிர்பந்தப்படுத்தி வெளியேற்றிவிட முடியாது என்று சவால்விட்டார். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது முத்கல் கமிட்டி பரிந்துரைப்படி தவறிழைத்தோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தயராக இருக்கிறோம் என்றும் சீனிவாசன், தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கி இருப்பார் என்றும் உச்சநீதிமன்றத்தில் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.
அப்போது குறுக்கிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், கிரிக்கெட்டின் நலன் கருத்தி கடினமான உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் என்று எச்சரித்தனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோணி, முத்கல் கமிட்டியிடம் பொய்யான வாக்குமூலம் கொடுத்திருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றம் சில அதிரடியான யோசனைகளைத் தெரிவித்து கிரிக்கெட் வாரியத்தின் பதிலைக் கோரியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் அதிரடி பரிந்துரைகள்:
- இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்காலத் தலைவராக சுனில் கவாஸ்கர் அல்லது மூத்த கிரிக்கெட் வீரர் ஒருவரை நியமித்தல்.
- என்.சீனிவாசனுக்குச் சொந்தமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடையோர் எவருமே இந்திய கிரிக்கெட் வாரியத்தில் இடம்பெறக் கூடாது.
- ஐ.பி.எல். சூதாட்ட குற்றச்சாட்டில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மறு உத்தரவு வரும் வரை நடப்பாண்டு ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடக் கூடாது.
இந்த பரிந்துரைகளுக்கான பதிலை கிரிக்கெட் வாரியம் நாளை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.
கிரிக்கெட் வாரியத்தின் நாளைய பதிலைத் தொடர்ந்து ஐ.பி.எல். பிக்ஸிங் வழக்கில் இடைக்கால உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்கவுள்ளது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோணி, முத்கல் கமிட்டியிடம் பொய்யான வாக்குமூலம் கொடுத்திருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றம் சில அதிரடியான யோசனைகளைத் தெரிவித்து கிரிக்கெட் வாரியத்தின் பதிலைக் கோரியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் அதிரடி பரிந்துரைகள்:
- இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்காலத் தலைவராக சுனில் கவாஸ்கர் அல்லது மூத்த கிரிக்கெட் வீரர் ஒருவரை நியமித்தல்.
- என்.சீனிவாசனுக்குச் சொந்தமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடையோர் எவருமே இந்திய கிரிக்கெட் வாரியத்தில் இடம்பெறக் கூடாது.
- ஐ.பி.எல். சூதாட்ட குற்றச்சாட்டில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மறு உத்தரவு வரும் வரை நடப்பாண்டு ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடக் கூடாது.
இந்த பரிந்துரைகளுக்கான பதிலை கிரிக்கெட் வாரியம் நாளை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.
கிரிக்கெட் வாரியத்தின் நாளைய பதிலைத் தொடர்ந்து ஐ.பி.எல். பிக்ஸிங் வழக்கில் இடைக்கால உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்கவுள்ளது.
Thursday, 20 March 2014
மர்மமான மலேசிய விமானம்! மாணவர்களால் கண்டுபிடிப்பு! இணையங்களில் வேகமாக பரவும் தகவல்!
மலேசிய விமானம் MH370 கடந்த 8ஆம் தேதி மாயமாய மறைந்து போனதை அடுத்து இந்நிமிடம் வரை அவ்விமானம் குறித்து பற்பல தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கும் இந்நிலையில் தைவான் பல்கலைக்கழக மாண்வர்கள் தற்செயலாக கூகுள் வரைபடத்தை பார்த்துக்கொண்டிருந்தபோது, தைவான் காடுகளுக்கு இடையே ஒரு விமானம் மறைந்து நின்று கொண்டிருப்பது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவர்கள் அந்த விமானத்தை புகைப்படம் எடுத்து இணையத்தளங்கள் மூலம் வெளியிட்டுள்ளனர்.
எனினும்அந்த புகைப்படத்தில் இருப்பது மாயமான மலேசிய விமானம்தான் என்பது உறுதி செய்யப்படாதபோதிலும் அந்த விமானம் அதுவாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்களில் வேகமாக இத்தகவல்கள் பரவிவருகின்றன.
மேலும் இந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் மிகவும் தாழ்வாக ஒரு விமானம் பறந்து சென்றதை பார்த்ததாகவும் கூறினார்கள்.
இந்த பரபரப்பான செய்திகளால் மலேசிய விமான நிலைய அதிகாரிகள் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீவிர ஆலோசனை செய்து வருகின்றனர் எனவும் இணையத்தளங்களில் செய்திகள் பரவிவருகின்றன.
இருப்பினும் அநேகமாக இது ஒரு புரளியாகத்தான் இருக்க முடியும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Tuesday, 18 March 2014
பூங்கா சிறுவர் மடல் வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு
அன்பர்களுக்கு ,
நம் பூங்கா சிறுவர் மடல் Blog(ப்ளாக்) நாளை முதல் ஏழாம் உலகம் .ப்ளாக்ஸ்போட் .காம் ஆக மாறவுள்ளது . நம் வாசகர்கள் அனைவரும் பதிவுகளை தொடர்ந்து பெறுவதற்கு www.ezhamulagam.blogspot.com என்ற இணையதளத்திற்கு செல்லவும் .
poongasiruvarmadal.blogspot.com ——–> www.ezhamulagamblogspot.com
என்றும் அன்புடன்,யாஸிர் நிசாருதீன்
Saturday, 15 March 2014
மலேசிய விமானம் திட்டமிட்ட வகையில் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது -மலேஷியப் பிரதமர்
காணாமல் போனதாக கூறப்படும் மலேஷிய பயணிகள் விமானத்தின் கட்டமைப்பு திட்டமிட்ட வகையில் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக மலேஷியப் பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.
செய்மதி மற்றும் ராடர் கட்டமைப்புக்களில் பதிவான தரவுகளின் பிரகாரம் விமானத்திலுள்ள ஒருவரால் திட்டமிட்ட வகையில் இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டமைக்கான உறுதியான புதிய ஆதாரம் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதன்மூலம் விமானம் காணாமல் போனமை தொடர்பான விசாரணை புதிய கோணத்தை எட்டியுள்ளதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் மலேஷியப் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்பிரகாரம் விமானத்திலிருந்த பணியாளர்கள் மற்றும் பயணிகள் குறித்து இந்த விசாரணைகளில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாகவும் நஜீப் ரசாக் குறிப்பிட்டுள்ளார்.
எம் ஏச் 370 என்ற குறித்த விமானம் 239 பேருடன் கடந்த சனிக்கிழமை காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த விமானத்தை தேடும் பணிகள் பன்நாட்டு ஒத்துழைப்புடன் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Subscribe to:
Posts (Atom)











.jpg)
