Sunday 1 June 2014

இலங்கையில் தொடரும் சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தொடரும் சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இலங்கை நாட்டில் பல பகுதியிலும் தொடர்ந்து கடும் மழை பெய்துவருகின்றது.
பல இலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் தாழ் நிலபக் பகுதிகள் தொடர்ந்தும் நீரில் மூழ்கியுள்ளதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக  மத்துகம, அகலவத்தை மற்றும் கலவானை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கொழும்பு மாநகரின் சில வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அதிக மழையுடன் கூடிய வானிலையினால் மேலும் பல மாவட்டங்களில் அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்று 100    மில்லி மீற்றருக்கு மேற்பட்ட மழை வீழ்ச்சி பதிவாகலாம் என    வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறுகின்றது.

No comments:

Post a Comment