Sunday 21 June 2009

நியூட்டன் அடைந்த வெற்றி


ஐசக் நியூட்டன் மாடு மேய்க்கச் செல்லும்போது, மாடுகளை எங்கேயோ போக விட்டு விட்டுப் புத்தகங்களை படிப்பார். சிறு பொருட்களை வைத்துக்கொண்டு சோதனைகள் நடத்திப் பார்ப்பார். இதன் மூலம் தனது அறிவை வளர்த்துக்கொண்டார்.

நன்றி - அறிஞர்கள் வாழ்வில் நடந்த அற்புத நிகழ்ச்சிகள்

Saturday 6 June 2009

உலகில் ஒரே ஒரு நிமிடத்தில்


38 புயல்கள் உருவாகின்றன
68 கார்கள் உற்பத்தியாகின்றன
100 பேர் மரணமடைகிறார்கள்
114 குழந்தைகள் பிறக்கின்றன
700 தொன் இரும்பு அகழ்ந்து எடுக்கப்படுகின்றது
850 மைல் தூரம் புவி தன்னைத்தானே சுற்றுகின்றது
3000 தொன் நிலக்கரி எடுக்கப்படுகிறது
4600 பாத அணிகள் தைக்கப்படுகின்றன
14000 தொன் உணவு உண்ணப்படுகின்றது
35000 தொன் நீர் கடலில் கலக்கிறது
580,000 தொலை பேசி மணிகள் ஒலிக்கின்றன
6,00,000 சிகரெட்கள் புகைக்கபடுகின்றன

Tuesday 2 June 2009

அறிஞர்களின் மொழிகள் .....................

கல்வி எனும் செடியின் வேர் வேண்டுமானால் கசப்பாகத் தோன்றலாம் ஆனால், அதன் பழம் இனிப்பானது . - அரிஸ்டோட்டில்
உழைப்பின்றி உண்பவர்கள் திருடர்கள். -காந்தி அடிகள்

நல்ல புத்தகம் நல்ல நண்பன். -நேருஜி

மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும். -அறிஞர் அண்ணா

எவ்வளவு கோபம் உண்டாக்கினாலும் எதிர்த்து தீங்கு செய்யாமல் பொறுத்து கொண்டால் எதிரியால் எவ்வளவும் உங்களுக்கு தீங்கிழைக்க முடியாது . -முஹம்மத் நபி (ஸல் )

சீனா தேசம் சென்றாலும் சீர் கல்வியை கற்றுக்கொள். -முஹம்மத் நபி (ஸல் )

தூய்மை , பொறுமை , விடாமுயற்சி இம்மூன்றும்தான் ஒருவனின் வெற்றிக்கு காரணமாக இருக்கின்றது . -விவேகானந்தர்