Saturday 25 October 2014

2015 ல் விண்டோஸ் 10 அறிமுகம்

grey இணையத் தொழில்நுட்பச் செய்திகள் [07 10 2014]மைக்ரோசாஃப்ட் தனது அடுத்த இயங்கு தளத்தை (Operating sytem) அறிமுகப்படுத்தியிருக்கிறது. மைக்ரோசாஃப்ட் வழக்கமான தனது முறையில் இருந்து மாறி முதல் முறையாக PC / Mobile / Tablet support என்ற வசதியுடன் “விண்டோஸ் 8″ ஐ அறிமுகப்படுத்தியது ஆனால், “விண்டோஸ் 7” போல அனைவரிடமும் வரவேற்பை பெறவில்லை குறிப்பாக நிறுவனங்களிடையே ஆதரவே இல்லை. எனவே அடுத்த வெளியீடை குறுகிய காலத்திலேயே அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. “விஸ்டா” போல தோல்வி இல்லையென்றாலும் “விண்டோஸ் 7″ போல வெற்றி இல்லை. அதோடு இதில் ஸ்டார்ட் பட்டன், Command prompt போன்றவை இல்லை இதுவும் பெரிய குறையாக கருதப்பட்டது.
இந்த நிலையில் புதிய பதிப்பு வெளியிடப்போவதாக மைக்ரோசாஃப்ட் கூறியதும் பலரும் இதன் அடுத்த பெயர் “விண்டோஸ் 9″ என்று கூறத் தொடங்கி இருந்தார்கள் ஆனால், மாறாக மைக்ரோசாஃப்ட் “விண்டோஸ் 10″ என்று அறிவித்து இருக்கிறது. ஏன் விண்டோஸ் 9 இல்லை? என்று அனைவருமே குழம்பினார்கள். இதற்குக் காரணமாக விண்டோஸ் 8 ன் மீது இருக்கும் ஒரு வெறுப்பை இது போல தள்ளி வைத்து தூரப்படுத்துகிறது மைக்ரோசாஃப்ட் என்று கூறப்படுகிறது. அதோடு புதிய வெளியீட்டில் விடுபட்ட ஸ்டார்ட் பட்டன், command prompt போன்றவை திரும்ப கொண்டு வந்து இருக்கிறது. 2015 ல் தான் “விண்டோஸ் 10″ அனைவருக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment