Thursday 6 August 2015

செவ்வாய்க் கிரகத்தை நேரில் பார்க்க புதிய App: நாசா அறிமுகம்

செவ்வாய்க் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக அமேரிக்கா வான்வெளி ஆய்வு மையமான நாசாவால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட கியுரியோசிட்டி ரோவர் விண்கலம் தனது 3ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது.
 
இதைக் கொண்டாடும் விதமாக நாசா புதிய இரண்டு ஆப்ளிகேஷன்களை உருவாக்கியுள்ளது. " மார்ஸ் டிரெக்" என்ற இலவச இணையத்தள ஆப் மூலமாக மிகத் துல்லியமான செவ்வாய்க் கிரகத்தின் படங்களை பார்க்க முடியும்.சுமார் 50 வருட காலமாக செவ்வாய் பற்றி நாசா மேற்கொண்ட முயற்சிகள் அனைவரது
பார்வைக்கும் வைத்துள்ளது நாசா.
 
அடுத்த ஆப் " கியுரியோசிட்டி எக்ஸ்பீரியன்ஸ்" இதன் மூலம் ரோவர் விண்கலத்துடன் செவ்வாய்க் கிரகத்தில் நாம் பயணிக்கும் அனுபவத்தை நமக்கு கொடுத்துள்ளது நாசா.3D முப்பரிமாண தோற்றத்தில் செவ்வாய்க் கிரகத்தை நாம் கண்டு மகிழலாம்.

No comments:

Post a Comment