Wednesday 16 December 2009

இரண்டாவது இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு அப்படி என்ன தான் நடந்தது ?


கடந்த 13ஆம் திகதி , கொழும்பு தேசிய கலை இலக்கியப் பேரவை மண்டபத்தில் நடைப்பெற்றது .

திட்டமிட்ட படி மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் சிறப்பாகவும் மாலை 2.00 மணிக்கு இந்த ஒன்றுகூடல் தொடங்கியது. இந்த ஒன்றுகூடலில் நானும் கலந்து கொண்டேன். அங்கு வந்திருந்த பதிவர்கள் அனைவரும் தன்னை ஏனைய பதிவர்களுக்கு அறிமுகம் செய்தனர் .


60க்கும் மேற்பட்ட பதிவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் 5க்கும் மேற்பட்ட பெண்பதிவர்களும் கலந்து கொண்டமை மனமகிழ்வைத் தந்தது. தொழில்நுட்பத் தகவல்களைத் தொடர்ந்து மு.மயூரன் அண்ணா அவர்கள் பின்னூட்டங்கள் பற்றிய கலந்துரையாடலை ஆரம்பித்துவைத்தார். கலந்துரையாடலில் பெயரிலிப் பின்னூட்டங்களால் ஏற்படும் மனவுளைச்சல் தொடர்பாகவும், பின்னூட்ட சுதந்திரம் தொடர்பாகவும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.



இறுதி நிகழ்வாக பதிவர்களிடையே குழு விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்பட்டது. இனிதே நடைபெற்ற இந்நிகழ்வில் வழங்கப்பட்ட சிற்றுண்டிகளும், சிற்றுண்டி நேர இடைவெளியும் பதிவர்களிடையே இருந்த இடைவெளியைக் குறைக்க உதவியது.
கோலாகலமாக நடைபெற்ற இந்நிகழ்வு மாலை 5.30 மணியளவில் இனிதே நிறைவுற்றது.

நிகழ்வுகளின் புகைப்படங்கள்

























No comments:

Post a Comment