Tuesday 10 August 2010

உலகின் மிகப் பெரிய மக்கா கடிகாரம் !

உலகின் மிகப்பெரிய மக்கா கடிகாரம் !






உலகின் மிக உயரமான கட்டடம் என்ற பெருமையை, சமீபத்தில் துபாய் நகரில் உள்ள, "புர்ஜ் துபாய்' என்ற கட்டடம் பெற்றுள்ளது. அதற்கு போட்டியாக, இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவில், மிக உயரமான ஓட்டல் ஒன்று கட்டப்பட்டுள்ளது. புர்ஜ் துபாய் கட்டடத்தை விட, உயரத்தில் இந்த ஓட்டல் 36 அடி மட்டுமே குறைவு. எனினும், இந்த ஓட்டலின் உச்சியில் வைக்கப்பட இருக்கும் கடிகாரம், உலகின் மிகப் பெரிய கடிகாரம் என்ற பெருமையைப் பெற உள்ளது.


"
மக்கா கிளாக் டவர் ராயல் ஓட்டல்' என பெயரிடப்பட்டுள்ள இந்த ஓட்டலைச் சுற்றி, ஏழு உயரமான கட்டடங்கள் உள்ளன. லண்டன் பிக்பென் கடிகாரத்தை விட 4.7 மடங்கு பெரிய கடிகாரம், இந்த கட்டடத்தின் உச்சியில் வைக் கப்பட உள்ளது. இந்த ஓட்டலின் மொத்த உயரம் 1591 அடி. மொத்தம் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் இந்த ஓட்டல் கட்டப் பட்டுள்ளது. புனித நகரமான மெக்காவில் மிகவும் ஆடம்பர, அதிக கட்டணம் கொண்ட ஓட்டல் இதுதான். இந்த ஓட்டலில், 1005 அறைகள் உள்ளன. அதில் தங்கி இருப்பவர்கள் பயணிக்க, 76 லிப்ட்கள் உள்ளன.

இந்த ஓட்டலின் உச்சியில் உள்ள கடிகாரம் இயங்கத் துவங்கும். ஜெர்மனி யில் தயாராகும் இந்த கடிகாரம் 147 அடி அகலம், 141 அடி உயரம் கொண்டது. கட்டடத்தின் நான்கு பக்கங்களிலும், இந்த கடிகாரம் இருக்கும். "ஹஜ்' நேரத்தில் மட்டும் மெக்காவிற்கு 40 லட்சம் பேர் வருகின்றனர்; மற்ற மாதங்களில் பல லட்சம் பேர் வருகின்றனர். எனவே, இந்த ஓட்டலுக்கு, எப்போதும் கிராக்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த பதிவை பற்றிய உங்கள் மறுமொழிகள் கூறுக.

3 comments:

  1. its 227m less than burj dubai means 744 feet less

    ReplyDelete
  2. மிகவும் அழகாக உள்ளது உங்கள் வலைப்பூ

    ReplyDelete