Monday, 10 March 2014

அதி உச்ச பாதுகாப்புடன் கூடிய கைத்தொலைபேசியை அறிமுகப்படுத்தியது போயிங் நிறுவனம்

உரிமையாளரைத் தவிர மற்றவர்கள் பயன்படுத்த முயன்றால் தன்னில் உள்ள தகவல்களை அழித்துக் கொண்டு, வேறு யாரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு தன்னையும் அழித்துக் கொள்ளும் ஜேம்ஸ்பாண்ட் வகையிலான உலகின் மிகப் பாதுகாப்பான கைத்தொலைபேசியினை போயிங் நிறுவனம் தயாரித்துள்ளது.
அன்ரொய்ட் தொழில்நுட்பத்தில் இந்த தொலைபேசி இயங்கும்.

அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்கள் பாதுகாப்பான முறையில் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்காக இந்த தொலைபேசி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கைதுதொலபேசியின் மற்ற உயர் ரக பாதுகாப்பு அம்சங்கள் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.
GSM, WCDMA மற்றும் LTE தொழில்நுட்பங்களின் கீழ் செயல்படும் இரண்டு சிறிய இணைப்புக்களை (MICRO SIM) இந்த கைத்தொலைபேசியில் பயன்படுத்த முடியும். இந்த தொலைபேசியில் மேற்கொள்ளும் உரையாடல்களை மற்றவர்கள் ஒட்டுக் கேட்பது சிரமம்.
தொலைக்காட்சியுடன் இணைத்துக் கொள்ளத்தக்க வகையில் HDMI கேபிளை இணைப்பதற்கான வசதியும் இந்த தொலைபேசியில் உள்ளது.
முதல்கட்டமாக இந்த தொலைபேசி, அரசு மற்றும் இராணுவம், உள்நாட்டுப் பாதுகாப்பு போன்ற துறைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட குறைந்த அளவு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த உயர்ரக தொலைபேசியை விற்பனை செய்ய போயிங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த தொலைபேசி விற்பனை செய்யப்பட்டாலும், அவர்கள் இந்த தொலைபேசியின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த தகவல்களை வெளியிடமாட்டோம் என ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும்.
பொதுமக்களுக்கு இந்தப் தொலைபேசியின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பம் குறித்த தகவல்கள் வெளியிடப்படமாட்டாது எனவும் போயிங் அறிவித்துள்ளது. தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் தொழில்நுட்பம் இந்த தொலைபேசியின் உச்ச பாதுகாப்பு அம்சமாகும்.
இந்த தொலைபேசி திறக்க முடியாத அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது; மீறித் திறக்க முயன்றால் அதிலுள்ள அனைத்துத் தகவல்களும் அழிந்து விடும். பிளக் போன் (BLACK PHONE) எனப் பெயரிடப்பட்ட இந்த தொலைபேசிக்கு மாற்று உதிரிபாகங்கள் எதுவும் இல்லை. உதிரிபாகங்களை மாற்ற முயன்றாலும் தொலைபேசி அழிந்து விடும்.

Sunday, 9 March 2014

காணாமல் போன மலேஷிய விமானத்தினுடையது என சந்கேக்கப்படும் பாகங்கள் வியட்நாம் கடற்பரப்பில் கண்டுபிடிப்பு

காணாமல் போனதாக கூறப்படும் மலேஷிய பயணிகள் விமானத்தின் ஒர் பகுதி  நடுவானில் உடைந்திருக்கலாம் என இந்த சம்பவம் தொடர்பில் விசாரணையை மேற்கொண்டுள்ள மலேஷியாவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
மலேஷியாவில் இருந்து சீனாவிற்கு பயணித்த குறித்த விமானம் 35 ஆயிரம் அடி உயரத்தில்  பயணித்துள்ளதுடன், இதன்போது விமானம் உடையக் கூடிய சாத்தியமே உள்ளதாக குறித்த அதிகாரியை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையே காணாமல் போன விமானத்தினது என சந்தேகிக்கப்படும் இரண்டு பாகங்கள் தமது நாட்டின் தென்பிராந்தியக் கடற்பரப்பில் உள்ளமை தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக  வியட்நாம் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதேவேளை விமானத்தின் சேதமடைந்த பாகங்களைக் கண்டறிந்து உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் பன்நாட்டு தேடுதல் மற்றும் மீட்பு அணியினர் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர்.

Saturday, 8 March 2014

இரண்டு ஒஸ்கார் விருதுகளை வென்ற சிறுவர் அனிமேஷன் திரைப்படம் - Frozen (2013)


தயாரிப்பாளர் பீட்டர் டெலின் தயாரிப்பிலும்  ஜெனிபர் லீ மற்றும் கிறிஸ் பக் என்ற இயக்குனர்களின் இயக்கத்திலும்   இந்த அனிமேஷன் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது .
 
இத்திரைப்படம்  சிறந்த அனிமேஷன்க்கும் சிறந்த பாடலுக்குமான ஒஸ்கார் விருதுகளை பெற்றது .

 Torrent மூலம் இத்திரைப்படத்தை தரவிறக்கம் செய்யலாம்
இத்திரைப்படத்தை இலவசமாக தரவிறக்கம் செய்ய 

Samsung Galaxy S5 யை மக்கள் எந்த அளவு வரவேற்பார்கள்?

Galaxy S5ல் உங்களுடைய ஃபோனைச் சாவியாகவும் கண்களாகவும் மாற்றக்கூடிய இரண்டு சென்சர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனை மக்கள் எந்த அளவு வரவேற்பார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
இந்த ஃபோனில் Android Kitkat வடிவம் உள்ளது. முந்தைய வடிவத்தைவிட 0.1 இஞ்ச் பெரிய (5.1 இஞ்ச்) திரை உள்ளது. மற்றபடி இந்த இரண்டுமே பார்ப்பதற்கு ஒரேமாதிரிதான் இருக்கின்றன.
2.5 GHz quad core processor இதில் பொருத்தப்பட்டுள்ளதால், அப்ளிகேஷன்கள் வேகமாக இயங்கும். இதன் கேமெராவும் 16 மெகாபிக்ஸல் அளவில் அருமையாக உள்ளது. 4G நெட்வொர்க்கிலும் இந்த ஃபோன் இயங்கும்.

‘ஏராளமான வாடிக்கையாளர்களுடன் பேசியபிறகுதான் இந்த ஃபோன் உருவாக்கப்பட்டுள்ளது’ என்கிறார் சாம்சங் ஆஸ்திரேலியாவின் மார்க்கெட்டிங் பிரிவுத் தலைவர் அர்னோ லீனியர். ‘சிறப்பாக இயங்குகிற, தூசு படியாத, தண்ணீரால் கெடாத ஒரு ஃபோனை அவர்கள் கேட்டார்கள், நாங்கள் அதையே தந்துள்ளோம்!’
அடிக்கடி ஃபோனை சார்ஜ் செய்யும் வசதி இல்லாதவர்களுக்காக, இதில் Power Saving Mode ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. இதை க்ளிக் செய்தால், திரை மங்கலாகி, கருப்பு வெள்ளையாகிவிடும், சில குறிப்பிட்ட அப்ளிகேஷன்கள்மட்டுமே இயங்கும். இதன்மூலம் ஃபோன் மூன்று முதல் எட்டு நாள்வரை சார்ஜ் ஆகாமல் செயல்படுமாம்!

கேமெராவிலும் சிறப்பு மாற்றங்கள் உண்டு. ஆட்டோ ஃபோகஸ் வசதி 0.3 விநாடிகளில் இயங்கி அசத்தும். ஒரே நேரத்தில் முன்னணி, பின்னணிக் காட்சிகளை இருவிதமான ஃபோட்டோக்களை எடுத்து, உங்களுக்குப் பிடித்த focusஐ வைத்துக்கொள்ளும் வசதியும் உண்டு.
இதில் PayPal ஒத்துழைப்புடன் பல இடங்களில் இதன்மூலம் பணம் செலுத்தலாம்.

இதேபோல், பயனாளரின் இதயத் துடிப்பை அளவிடும் சென்சர் ஒன்றும் கேமெரா அருகே பொருத்தப்பட்டுள்ளது. இதுவும் பயனாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
icon

Heart Rate Sensor

Heart Rate Sensor


VLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள 3 ரகசிய பயன்பாடுகள்



கணினி உபயோகிக்கும் அனைவருக்கும் VLC மீடியா பிளேயரை பற்றை அறிந்திருப்போம். கணினியில் வீடியோ ஆடியோ பைல்களை இயக்க உதவும் இலவச மென்பொருள்.இந்த மென்பொருளில் ஏராளமான வசதிகள் உள்ளது. மற்றும் இந்த மென்பொருள் வெறும் பிளேயராக மற்றும் இல்லாமல் சில மற்ற வசதிகளையும் கொண்டுள்ளது.  ஆனால் பெருமாலானவர்கள் அந்த வசதிகள் இருப்பது கூட தெரியாமல் அதற்கென தனித்தனி மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருக்கின்றனர். அதன் படி VLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள மூன்று ரகசிய வசதிகளை பற்றி இங்கு குறிப்பிடுகிறேன்.


1)Add Watermarks
குறிப்பிட்ட ஒரு வீடியோவுக்கு நம்முடைய பெயரையோ அல்லது நம் பிளாக்கின் பெயரையோ வாட்டர் மார்க்காக கொண்டுவர நாம் வேறு சில மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருப்போம். ஆனால் இந்த வசதி VLC மீடியா பிலேயரிலே இருக்கிறது.

அதற்க்கு VLC மென்பொருளை ஓபன் செய்து Tools - Effects and Filters - Video Effects - Vout/Overlay - சென்று வீடியோவுக்கு வாட்டர் மார்க் எபெக்ட் போட்டு கொள்ளலாம். 

2) Video Converter
நம்முடைய வீடியோ பைல்களை கன்வேர்ட் செய்ய ஏராளமான இலவச மென்பொருட்களும், கட்டண மென்பொருள்களும் இருக்கின்றன அதில் நமக்கு பிடித்த மென்பொருளை பயன்படுத்தி நாம் வீடியோவை கன்வேர்ட் செய்கிறோம். ஆனால் VLC Media Player ல் இந்த கன்வேர்ட் செய்யும் வசதியும் உள்ளது. அதை உபயோகிக்க 

Media - Open File - Select Video கன்வேர்ட் செய்ய வேண்டிய வீடியோவை தேர்வு செய்து கொண்டு பின்னர் Ctrl+R கொடுக்கவும். அடுத்த விண்டோவில் ADD பட்டனை கிளிக் செய்து மறுபடியும் வீடியோவை தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள Convert பட்டனை அழுத்தவும்.
  • அடுத்து Destination file என்பதில் Browse கிளிக் செய்து உங்கள் பைல் சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்து கொள்ளவும். அடுத்து நான் மேலே படத்தில் காட்டியுள்ள பட்டனில் கிளிக் செய்து உங்கள் வீடியோ பார்மட் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

பார்மட் தேர்வு செய்தவுடன் Start பட்டனை அழுத்தினால் உங்கள் வீடியோ கன்வேர்ட் ஆகிவிடும். 

3)Free Online Radio:
VLC மீடியா ப்ளேயரில் ஆன்லைனில் உள்ள ரேடியோக்களை எந்த வித கட்டணமுமின்றி இலவசமாக கேட்டு ரசிக்கலாம். இந்த வசதியை கொண்டு வர VLC யை ஓபன் செய்து Ctrl + L கொடுக்கவும். உங்களுக்கு இன்னொறு விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Internet என்பதை கிளிக் செய்து ரேடியோ சேனல்கள் ஓபன் ஆகும் அதில் பாடல்களை கேட்டு ரசிக்கலாம். 


தமிழ் பாட்டு வரல்லன்னா என்ன திட்டாதிங்க. ஆங்கில பாடல்கள் தான் இருக்கும். இப்படி பயனுள்ள வசதிகள் நமக்கு தெரியாமலேயே VLC மீடியா பிளேயரில் ஒளிந்துள்ளது
.

Sunday, 2 March 2014

BLUETOOTH வழியாக நண்பனின் MOBILE PHONE ஐ நீங்கள் பயன்படுத்தலாம்


இந்த MOBILE மென்பொருளின் பயன்பாடு : 
1) Call from his phone. It includes all call functions like hold etc.
2) Read his messages
3) Read his contacts
4) Change profile
5) Play his ringtone even if phone is on silent
6) Play his songs
7) Restart the phone
8) Switch off the phone
9) Restore factory settings
10) Change ringing volume

இந்த மாதிரியான வேலையை உங்கள் நண்பனின் MOBILE PHONE இல் செய்யலாம் .இதற்கு BLUETOOTH என்று அழைக்கப்பட்டு கம்பியில்லா தொடர்பு தேவை .JAVA SOFTWARE INSTALL செய்ய கூடிய MOBILE HANDSET தேவைப்படும் .இந்த மென்பொருளை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளவும் .இந்த FILE ZIP FORMAT இல் இருக்கும் .இதை EXTRACT செய்து உங்களின் மொபைல் PHONIL INSTALL செய்து  கொள்ளுங்கள் நண்பரே .இதில் 0000 DEVICE CODE ஆக பயன்படுத்தவும் .

நன்றி - வீ.அருண்குமார்

Wednesday, 30 January 2013

ஆங்கிலம் கற்க புதிய இணையதளமும் மேலதிக வகுப்புகளும்

கொழும்பு  டி. எஸ் .சேனாநாயக கல்லூரியை சேர்ந்த திரு .சுஜீவன் ஆசிரியரால் உருவாக்கப்பட்ட இந்த இணையதளம்

English Language 

English Literature G.C.E (O/L)

General English G.C.E (A/L)

 என்ற பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டது .

இவருடைய மேலதிக வகுப்புகளுக்கு செல்ல

Friday, 28 December 2012

விசைப்பலகை குறுக்குவழிகள்(Shortcuts) (மைக்ரோசாப்ட் விண்டோஸ்)

இதோ உங்கள் தேவைகளை இலகுவாக்க  மைக்ரோசாப்ட் விண்டோஸ்  விசைப்பலகை குறுக்குவழிகள் (100)

Keyboard Shortcuts (Microsoft Windows)
1. CTRL+C (Copy)
2. CTRL+X (Cut)
...... 3. CTRL+V (Paste)
4. CTRL+Z (Undo)
5. DELETE (Delete)
6. SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin)
7. CTRL while dragging an item (Copy the selected item)
8. CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item)
9. F2 key (Rename the selected item)
10. CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next word)
11. CTRL+LEFT ARROW (Move the insertion point to the beginning of the previous word)
12. CTRL+DOWN ARROW (Move the insertion point to the beginning of the next paragraph)
13. CTRL+UP ARROW (Move the insertion point to the beginning of the previous paragraph)
14. CTRL+SHIFT with any of the arrow keys (Highlight a block of text)
SHIFT with any of the arrow keys (Select more than one item in a window or on the desktop, or select text in a document)
15. CTRL+A (Select all)


அடுக்களைக் கணினி ( HP Touch Smart IQ 770)


      
 இதோ  வந்துவிட்டது   குடும்ப அங்கத்தவர்களுடனான  தொடர்புகளை நவீன தொழில்நுட்ப முறைகளின் மூலம்  எந்நேரமும்   சாத்தியப்படுத்தும் பொருட்டு  விசேடமாக உருவாக்கப்பட்டதே   HP Touch Smart IQ 770  கணினியாகும் .  இது சமயலறையில் பாவிக்கும்  பொருட்டு  உருவாக்கப்பட்டது .


              இந்தத் கணினி      கொண்டதால்  , திரையைத்  தொடுவதன் மூலம்  தொலைகாட்சி ,சங்கீதம் ,திரைப்படம் ,நிழற்படம்  மற்றும் உங்கள் கணினியில் சேமித்து  வைத்துள்ள தரவுகள் என்பவற்றை  கம்பியில்லா தொழிநுட்ப வலையமைப்பின்  உதவியுடன் பெற்றுக்கொள்ள முடியும்.  சமையலறையில்  பயன்படுத்துவதற்கென  உருவாக்கப்பட்டிருந்தாலும்  அனைத்து  குடும்ப அங்கத்தவர்களும் பாவிக்கும் வகையில் இதன் வடிவமைப்பு காணப்படுகிறது .

வாசித்துவிட்டு  எப்படி  இருக்குது  என்று   கொஞ்சம்  சொல்லுங்க ....