Monday 10 March 2014

அதி உச்ச பாதுகாப்புடன் கூடிய கைத்தொலைபேசியை அறிமுகப்படுத்தியது போயிங் நிறுவனம்

உரிமையாளரைத் தவிர மற்றவர்கள் பயன்படுத்த முயன்றால் தன்னில் உள்ள தகவல்களை அழித்துக் கொண்டு, வேறு யாரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு தன்னையும் அழித்துக் கொள்ளும் ஜேம்ஸ்பாண்ட் வகையிலான உலகின் மிகப் பாதுகாப்பான கைத்தொலைபேசியினை போயிங் நிறுவனம் தயாரித்துள்ளது.
அன்ரொய்ட் தொழில்நுட்பத்தில் இந்த தொலைபேசி இயங்கும்.

அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்கள் பாதுகாப்பான முறையில் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்காக இந்த தொலைபேசி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கைதுதொலபேசியின் மற்ற உயர் ரக பாதுகாப்பு அம்சங்கள் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.
GSM, WCDMA மற்றும் LTE தொழில்நுட்பங்களின் கீழ் செயல்படும் இரண்டு சிறிய இணைப்புக்களை (MICRO SIM) இந்த கைத்தொலைபேசியில் பயன்படுத்த முடியும். இந்த தொலைபேசியில் மேற்கொள்ளும் உரையாடல்களை மற்றவர்கள் ஒட்டுக் கேட்பது சிரமம்.
தொலைக்காட்சியுடன் இணைத்துக் கொள்ளத்தக்க வகையில் HDMI கேபிளை இணைப்பதற்கான வசதியும் இந்த தொலைபேசியில் உள்ளது.
முதல்கட்டமாக இந்த தொலைபேசி, அரசு மற்றும் இராணுவம், உள்நாட்டுப் பாதுகாப்பு போன்ற துறைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட குறைந்த அளவு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த உயர்ரக தொலைபேசியை விற்பனை செய்ய போயிங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த தொலைபேசி விற்பனை செய்யப்பட்டாலும், அவர்கள் இந்த தொலைபேசியின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த தகவல்களை வெளியிடமாட்டோம் என ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும்.
பொதுமக்களுக்கு இந்தப் தொலைபேசியின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பம் குறித்த தகவல்கள் வெளியிடப்படமாட்டாது எனவும் போயிங் அறிவித்துள்ளது. தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் தொழில்நுட்பம் இந்த தொலைபேசியின் உச்ச பாதுகாப்பு அம்சமாகும்.
இந்த தொலைபேசி திறக்க முடியாத அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது; மீறித் திறக்க முயன்றால் அதிலுள்ள அனைத்துத் தகவல்களும் அழிந்து விடும். பிளக் போன் (BLACK PHONE) எனப் பெயரிடப்பட்ட இந்த தொலைபேசிக்கு மாற்று உதிரிபாகங்கள் எதுவும் இல்லை. உதிரிபாகங்களை மாற்ற முயன்றாலும் தொலைபேசி அழிந்து விடும்.

No comments:

Post a Comment