Wednesday 12 March 2014

அதிவேக இணையம் – ஆச்சர்யமளிக்கும் தகவல்கள்!


சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு வரும் என எதிர்பார்க்கப்பட்ட இத்தொழில்நுட்பத்தினை மூன்றே ஆண்டுகளில் பயனர்கள் பெறுவதற்கான முயற்சிகளில் கூகிள் இறங்கிறயுள்ளது.  
இதுபோன்று அதிவேக இணைய இணைப்பை ஏற்கனவே அமெரிக்காவில் கேன்சஸ் நகரத்தில் பைபர் என்னும் திட்டத்தின் கீழ், அங்கு வசிக்கும் மக்களுக்கு ஒரு நொடிக்கு 1GB Data பரிமாற்ற வேகத்தினை தந்துவருகிறது.
தற்பொழுது ஒரு நொடிக்கு 10 கிகா பிட்ஸ் வேகத்திற்கு இன்டர்நெட் பயன்பாட்டை கொண்டுவரும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது கூகிள். இந்தளவிற்கு இணைய வேகம் அமைந்தால் ஒரு திரைப்படத்தை இணையம் மூலம் 4 வினாடிகளில் பரிமாற்றம் செய்துகொள்ள முடியும்.
இணையத்தின் வேகம் இந்தளவிற்கு இருந்தால், சாப்ட்வேர் சேவைகளை மிக எளிதாக அனைவரும் பெற்றுப் பயன்படுத்த முடியும். அதிகமான கொள்ளவு கொண்ட மென்பொருட்களை ஒரு நொடியில் தரவிறக்கம் செய்து பயன்படுத்திட முடியும்.
இதுபோன்ற அதிவேக இணையவேக தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதில் கூகிளுடன் வேறு சில நிறுவனங்களும் இணைந்துள்ளன.
இதற்கு முன்பு, சீனா, பிரிட்டன் நாடுகள் லைபை – lifi என்ற தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி ஒளி மூலம் டேட்டாவினை அதிக வேகத்தில் பரிமாறிக்கொள்ள முடியும் என நிருபித்திருந்தனர்.

மற்றுமொரு நிறுவனமான வெரிசான் நிறுவனமும் 10 கிகா பிட் டேட்டா பரிமாற்றச் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது. வெரிசான் நிறுவனம் மட்டுமல்லாமல் அமெரிக்காவின் வேறு சில இணைய சேவை நிறுவனங்களும் இந்த அதிவேக தொழில்நுட்பத்தின் மூலம் டேட்டாவினை பரிமாற்றம் செய்தது.
எனினும் கூகிள் நிறுவனம் இத்தொழில்நுட்பத்தினை முறையான ஆய்வின் மூலம் மேற்கொள்வதால், விரைவில் அதிவேக இணைய இணைப்பு உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
நன்றி: தினமலர். (கம்ப்யூட்டர் மலர்)

No comments:

Post a Comment