Wednesday 12 March 2014

விமானம் விழுந்ததைக் கண்ட 9 பேர்; உண்மை கூறுமாறு அதிகாரிகள் மீது தண்ணீர் போத்தல் வீச்சு


கோலாலம்பூர்: எம்.எச்.370 விமானம் பாரிய வெளிச்சத்துடன் தாழிறங்கியதை நேரில் கண்டதாக இதுவரை ஒன்பது பேர் சாட்சியமளித்துள்ளனர்.   

இதேவேளை இவ்  விமானமானது மலாக்கா நீரிணையை நோக்கி நகர்வதனை மலேசிய இராணுவ ராடரில் பதிவாகிய தகவல்கள் மூலம் அறிய முடிந்ததாக கூறப்பட்டதை  மலேசியா விமானப் படையின் தலைமை அதிகாரி ரொட்சைல்  டௌட் கூறியள்ளார்.    

இந்நிலையில் சீனாவில் பெய்ஜிங்கில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டிருந்த மலேசிய எயார்லைன்ஸ் அதிககிரகள் மீது உண்மையை கூறுமாறு கோரி உறவினர்கள் மூவர் தண்ணீர் போத்தலால் வீசி தாக்கியுள்ளனர்.

   இந்தச் சந்திப்பில்  உண்மையை கூறுமாறு உறவினர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பினர்.  உண்மையில் என்ன நடந்ததென்பதனை கூறுவதற்கு அதிகாரிகள் மறுத்த நிலையில் அவர்கள் மீது தண்ணீர் போத்தல்கள் வீசப்பட்டதுடன் அவர்களை தாக்குவதற்கும் சிலர் முயற்சித்துள்ளனர்.  

  விமானம்  பாரிய வெளிச்சத்துடனும் சத்தத்துடனும்  விழுந்ததை நேரில் காண்பதாக  9 பேர் பொலிசில் சாட்சியமளித்துள்ளனர். ஏற்கனவே மலேசியாவின் மேற்கு பகுதியை சேர்ந்த இருவர் இவ்வாறான சாட்சியத்தை நேற்று வழங்கியிருந்தனர். 

 தென் சீனக் கடல் பகுதியைச் சேர்ந்த மலேசியா  நகரங்களை கோலா பேசர், பென்ரை சஹாஸா புலன்  பென்ரை செனக் மற்றும் பெனாரிக் ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்களே விமானம் விழுந்ததை நேரில் கண்டதாக சாட்சியங்கள்  அளித்துள்ளனர். 



  பெனாரிக்கை சேர்ந்த பஸ் சாரதி ஒருவர் விமானம் ஒன்று கிழீறங்கியதை சனிக்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் கண்டுள்ளார்.  மரங்பகுதியைச் சேர்ந்த  8 பேர் தாம் பாரிய சத்தத்துடன் ஒரு பிளம்பு புலாவு கபாஸை நோக்கி இறங்கியதை கண்டதாக சாட்சியமளித்துள்ளனர்.  

  36வயதுடைய அலியாஸ் சலே என்பவர் தெரிவிக்கையில் ; நானும் எனது நணபர்கள் சிலரும் மராங் கடற்கரையிலிருந்து 400 மீற்றர்  தொலைவில் வாங்கு ஒன்றில் இருந்தார். 

 சனிக்கிழமை  1.20 அதிகாலையில் பாரிய சத்தம் மற்றும் ஒளியுடன்  விமானம் கிழங்கியது. அந்த சத்தம் பாரிய விமான இயந்திர ஒலி போலவே இருந்தது எனுக் கூறியுள்ளார்.  

இவரது கூற்றின் பிரகாரம் விமானம் விழுந்திருக்கலாமென கருதப்படும் மலாக்கா நீரிணையிலேயே தற்பொழுது முழுக்கவனத்துடன் தேடுதல் நடைபெற்று வருகின்றது.  

- டெய்லி மெயில்

No comments:

Post a Comment