Sunday 5 July 2009

ஈர்ப்பு விதி கண்டுபிடிப்பு


நியூட்டன் ஆப்பிள்(அப்பிள்) மரமொன்றின் கீழ் இருந்தபோது, அப்பிள் பழமொன்று அவர் தலையில் விழுந்ததாகவும், இது அவர் சிந்தனையைக் கிளறி, புவிசார்ந்த, விண்வெளி சார்ந்த ஈர்ப்புபற்றிய எண்ணக்கரு உதித்ததாகவும் கதை நிலவுகிறது. இது அவரது சொந்தக் கதையான, வூல்ஸ்தோர்ப் மனோரின்யின் யன்னலோரம் இருந்து அப்பிள் மரத்திலிருந்து விழுந்ததைக் கவனித்த கதையை மிகைப் படுத்திக் கூறியதாகும் எனக் கருதப்படுகிறது. நியூட்டனின் கதையும், பிற்காலத்தில் அவரால் கட்டப்பட்டது என்பது பலருடைய கருத்து.

1667 ல், தனது கண்டுபிடிப்புக்களை, முடிவிலித் தொடர்கள் மூலமான பகுப்பாய்வு பற்றி (De Analysi per Aequationes Numeri Terminorum Infinitas) என்னும் வெளியீடு மூலமும், பின்னர் தொடர்களினதும், பிளக்ஸியன்களினதும் வழிமுறைகள் பற்றி (De methodis serierum et fluxionum ) மூலமும் வெளிக்கொணர்ந்தார்.

நியூட்டனும், லீப்னிசும் நுண்கணிதக் கோட்பாடுகளைத் தனித்தனியே உருவாக்கியதுடன், வெவ்வேறு குறியீடுகளையும் பயன்படுத்தினார்கள். நியூட்டன் அவருடைய வழிமுறைகளை லீப்னிசுக்கு முன்னரே உருவாக்கியிருந்தும், பின்னவருடைய குறியீடுகளும்,வகையீட்டு வழிமுறை"யும், மேம்பட்டதாகக் கருதப்பட்டுப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. நியூட்டன், அவர் காலத்தைச் சேர்ந்த மிகத் திறமையான அறிவியலாளருள் ஒருவராக இருந்தும், அவருடைய கடைசி 25 வருடங்கள், லீப்னிசுடனான பிரச்சினைகளால் பாழாக்கப்பட்டது. லீப்னிஸ் தன்னுடைய கண்டுபிடிப்புக்களைத் திருடியதாக அவர் குற்றஞ்சாட்டி வந்தார்.

1669 ல், கணிதத்துக்கான லூக்காசியன் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்டார். இவருடைய இந்தப்பதவி இவர், கல்லூரியின் ஆய்வாளாராக(Fellow) நீடிப்பதற்குத் தேவாலயத்துக்குச் செல்லவேண்டுமென்ற விதியிலிருந்து விலக்குப் பெற்றதுடன், அவருடைய எதிர்-திரி(கிறி?)த்துவவாதக் கருத்துக்கள் காரணமாக மரபுவாதத் தேவாலயத்துடன் ஏற்படவிருந்த முரண்பாடுகளையும் தவிர்த்துக்கொண்டார்

நன்றி -http://ta.wikipedia.org/wiki/ஐசக்_நியூட்டன்

No comments:

Post a Comment