Tuesday 25 August 2009

இலங்கை தமிழ் வலைபதிவர்களின் சந்திப்பில் அப்படி என்னதான் நடந்தது ?


புளோகருக்கு பத்து வயது எனக்கு பதினோரு வயது .


ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி வெள்ளவத்தை தமிழ்ச்சங்க வினோதன் மண்டபத்தில் இலங்கை வலைபதிவர்கள் ஒன்றுகூடல் நடைபெற்றது. இதுவே இலங்கை முதல் வலைப்பதிவர் சந்திப்பாகும் . திட்டமிட்ட படி மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் சிறப்பாகவும் காலை 9:15 மணிக்கு இந்த ஒன்றுகூடல் தொடங்கியது. இந்த ஒன்றுகூடலில் நானும் கலந்து கொண்டேன்.


அங்கு Blogger இன் 10வது பிறந்தநாள் கேக்கை 10 பேரைக்கொண்டு மெழுகுவர்த்திகளை ஏற்றி கேக்கை வெட்டி கொண்டாடினார்கள். அங்கு வந்திருந்த பதிவர்கள் அனைவரும் தன்னை ஏனைய பதிவர்களுக்கு அறிமுகம் செய்தனர் .






அங்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த திரு எழில்வேந்தன் ஐயா அவர்கள் பல புதிய விளக்கங்களை தந்தார். பின்னர் மருதவூரான் அண்ணா திரட்டிகள் பற்றி அருமையாக விளக்கினார். அதன் பின்னர் லோசன் அண்ணா தனது பதிவுலக அனுபவங்கள் பற்றி அருமையாக சொன்னார்.






அங்கு வந்திருந்த அனைத்து பதிவர்களை விட நான் தான் வயது குறைந்தவன். இந்த ஒன்றுகூடலில் 80 வலைபதிவர்கள் கலந்து கொண்டனர் . இந்த ஒன்றுகூடல் நேரடியாக www.livestream.com/ என்ற இணையதளத்தில் ஒளிபரப்பாகியது. இந்த ஒன்றுகூடல் 12 : 45 மணியளவில் இனிதே நிறைவடைந்தது .

15 comments:

  1. ஓ நீதான் அந்த கு(சு)ட்டி பையனா?? வாழ்த்துகள்.. தொடருக..

    ReplyDelete
  2. Word verification இனை எடுத்து விட்டால் பின்னூட்டமிட சுலபமாக இருக்கும்.

    ReplyDelete
  3. நன்றி ஆபிரகாம் அண்ணா

    ReplyDelete
  4. நன்றாக உள்ளது

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் சுட்டிப் பொடியா? உங்கள் வயதுக்கு ஏற்ற கட்டுரை. பாராட்டுக்கள் இன்னும் எழுதுங்கள்.

    ReplyDelete
  6. உங்கள் அறிவுரைக்கு நன்றி வந்தியத்தேவன் அண்ணா

    ReplyDelete
  7. வாழ்க வளர்க தம்பி!

    ReplyDelete
  8. தம்பி உங்கள் சின்ன பார்வையில் இவ்வளவு விசயங்களை சொல்லியிருக்கிறீர்கள்
    இன்னும் எழுதுங்கள்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. நன்றி ஜோ அண்ணா
    நன்றி கரவைக்குரல் அண்ணா

    ReplyDelete
  10. இலங்கை வலைப்பதிவர் சந்திப்பின் கதாநாயகனே மீண்டும் நல்ல நினைவை மீட்டுவிட்டீர்கள்

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. வாழ்த்துகள் தம்பி..

    ReplyDelete
  13. நல்லஎதிர்காலம் காத்திருக்கிறது
    வாழ்த்துக்கள் தம்பி.

    ReplyDelete
  14. மறுமொழி அளித்த உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி

    ReplyDelete