Sunday 2 November 2014

நீங்க எப்போ இறந்து போவீங்க?... இந்த வாட்ச் சொல்லுமாம்!....

மனிதன் இந்த உலகத்தில் வாழும் வாழ்நாளை குறிக்கும் தொழில்நுட்பத்தில் வெளியாகியுள்ளது டிக்கர் என்ற கைக்கடிகாரம்.
பெட்ரிக் கோல்டிங் (batric Kolding) என்பவர் டிக்கர் (Tikker) என்ற கைக்கடிகாரத்தை தயாரித்து உள்ளார்.


 இந்த கைக்கடிகாரத்தில், உதரணமாக‌ 41 வருடம், 3 மாசம், 4 நாள், 7 மணிநேரம், 5 நிமிடம், 19 நொடியில‌ நீங்க இறந்து விடுவீர்கள் என்று காட்டும்.
இப்படி ஒரு கைக்கடிகாரத்தை அறிமுகப்படுத்திய பெட்ரிக் கோல்டிங் கூறியதாவது, மனித‌ வாழ்க்கையில் இறப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்று, ஆனால் நாம் எல்லோரும் நமக்கு இருக்கிற ‌ இந்த விலை மதிப்பில்லாத‌ நேரத்தை சரியாக பயன்படுத்துவது இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த டிக்கர் 



கைக்கடிகாரம் மற்ற ஸ்மார்ட் கடிகாரம் போல உங்கள் உங்க வேலைகளை கண்டு சோர்வடைய வைக்காது, அதுக்கு பதிலா இந்த கைக்கடிகாரம் பார்க்கும் போது எல்லாம் நமக்கு வாழ்நாள் இவ்வளவுதான், அதனால் நாம் எல்லா வேலையயும் சிறப்பாக செய்யனும், இன்னும் நிறைய சாதிக்கனும்னு தோனும்.
ஒரு சிறந்த மற்றும் சந்தோசமான வாழ்கையை வாழ்றதுக்கு இந்த கைக்கடிகாரம் கண்டிப்பாக உதவிகரமாக‌ இருக்கும். அதற்காகத் தான் இந்த கைக்கடிகாரம் டிஸைன் செய்யப்பட்டு உள்ளது.
நமக்கு தரபட்ட வாழ்க்கை என்பது ஒரு முறை தான், எனவே இந்த வாழ்கையில் உள்ள ஒவ்வொரு நாளின் பயனையும் இந்த கைக்கடிகாரத்தின் துணையோட முழுமையாக‌ பெற வேண்டும் என்பது தான் இந்த கடிகாரத்தின் தத்துவம் என்று கூறியுள்ளார்.

இந்த கைக்கடிகாரம் இன்றைய சந்தை மதிப்பில் ஓன்லைனில் 79 அமெரிக்க டொலர்களுக்கு கிடைக்கிறது. சந்தை மதிப்பில் ரூபாய் 4,871.26 க்கு கிடைக்கிறது என இதன் தயாரிப்பளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment