Sunday 2 November 2014

மலேசிய விமானம் மாயம்: விமான போக்குவரத்து துறைக்கு எதிராக பயணியின் மகன்கள் வழக்கு

 கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானம் எம்,.ஹெச் 370ல் பயணித்த தன் தந்தை தொடர்பாக எந்த விதத் தகவலும் தெரிவிக்கவில்லை என்பதால், மலேசியாவைச் சேர்ந்த இரு சிறுவர்கள், மலேசிய ஏர்லைன்ஸ் மற்றும் அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

 கடந்த மார்ச் 8ம் தேதி கோலாலம்பூர் முதல் பீஜிங் வரை சென்று கொண்டிருந்த எம்ஹெச் 370 விமானம் மாயமாகி 8 மாதங்கள் ஆகின்றன. அதன் பிறகு, இந்த விமானத்தில் காணாமல்



 போனதாக அறிவிக்கப்பட்டவர்களின் உறவினர் முதல் முறையாக இவ்வாறு வழக்கு தொடர்ந்துள்ளார். 

விமானத்தில் மாயமானதாக அறிவிக்கப்பட்ட ஜீ ஜிங் ஹாங் என்பவரின் மகன்கள் ஜீ கின்சன் (13), ஜே கின்லாண்ட்(11) ஆகிய இருவரும் நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறையின் மெத்தனம் மற்றும் அக்கறையின்மை குறித்து தங்கள் மனுவில் குறிப்பிட்டு மலேசிய கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

 சிறுவர்கள் சார்பில் வழக்கறிஞர் கேரி சாங்க் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். விமானத்தை குறிப்பிட்ட அந்த நேரத்துக்குள் தொடர்பு கொண்டு காப்பாற்ற வழியிருந்தும் மலேசிய அதிகாரிகள் மெத்தனமாக இருந்துவிட்டதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

இவ்வளவு தொழில் நுட்பம் வளர்ந்துள்ள இந்தக் காலத்தில், ஒரு பெரிய விமானம் மறைந்து போவதென்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.

 தங்கள் மன உளைச்சலுக்கும், ஆதரவின்மைக்கும், தங்கள் தந்தை ஜீ ஜிங் ஹாங் இல்லாமல் தாங்கள் வலியுடன் வாழ்ந்து வருவதாகவும், தங்கள் தந்தை பார்த்து வந்த இணைய தொழில் மூலம் மாதந்தோறும் கிடைத்த 17 ஆயிரம் ரிங்கிட் வருமானம் போய்விட்டதாகவும் மனுவில் சிறுவர்கள் சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment