Tuesday 26 May 2009

மகாத்மா காந்தி


அஹிம்சா தனித்துவத்தின் தந்தையான மகாத்மா காந்தி எளிமையான தோற்றம் , ஆடம்பரமற்ற வாழ்க்கை , முழு மனித குலத்தையும் மேன்மைப்படுத்த வேண்டும் என்ற சீரிய குணம் என்பவற்றுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் . அதன் காரணமாக மகாத்மாவாக வரலாற்றில் இடம் பெற்றவர் . இவரது இயற்பெயர் மோகனதாஸ் காந்தி . வட இந்தியாவின் போர்பந்தர் என்ற கிராமத்தில்1869ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2ம் திகதி பிறந்தார் . இவரது போராட்டம் 'அஹிம்சா வாதம்' என்ற வன்முறையற்ற சமாதான வழியிலான போராட்டமாகவே இருந்தது . அதனால் அனைத்துலகினதும் கவனத்தை கவர்ந்தது . சத்தியாக் கிரகமும் ,உண்ணா விரதமுமே இவரது போராட்ட ஆயுதங்களாக இருந்தன . இவர் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுங்கி வைக்கப்பட்டிருந்த சமூகத்தின் உயர்வுக்காகவும் உழைத்தார் . இவர் இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடினர் .இவரது அஹிம்சா போராட்டம் , சத்தியாக் கிரகம் ,உண்ணா விரதம் ஆகிய போராட்டங்களின் முன்னிலையில் பிரித்தானிய ஆங்கிலேய பேரரசு வெட்கித் தலை குனிந்தது.1947ம் ஆண்டு தம் தோல்வியை ஒப்புக்கொண்டு இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கியது . இந்த நிலையிலும் இந்து -முஸ்லிம் இன ஒற்றுமையை காந்தி வலியுறுத்துவதை இந்து மத வகுப்பு வாதிகள் விரும்பவில்லை .இதன் காரணமாக இத்தகைய இந்து மத வகுப்பு வாத அமைப்பின் உறுப்பினன் ஒருவரால் 1948ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் திகதி மகாத்மா காந்தி சுட்டு கொல்லப்பட்டார்
நன்றி - ஆயிரம் ஆண்டுகால மனிதர்கள்

1 comment:

  1. You are correct, god sent him to prevent death of many people by violence.

    If was not there, lot of people would have died. You can seee now in the current world NO WHERE VIOLENCE WINS.

    ReplyDelete